பழமொழி அகரவரிசை

[எண் : பாட்டைக் குறிக்கும்]

அகலுள் நீராலே துடும்பல் எறிந்து விடல் 98
அக்காரம் பால்செருக்கும் ஆறு 362
அங்காடி மேயும் பழங்கன்று ஏறாதலும் உண்டு 202
அஞ்சாதே தின்பது அழுவதன்கண் 97
அஞ்சும் பிணிமூப் பருங்கூற் றுடனியைந்து துஞ்சவருமே துயக்கு
365
அஞ்சுவார்க் கில்லை யரண் 285
அடுப்பின் கடைமுடங்கும் நாயைப் புலியாமெனல் 67
அணங்காகும் தான்செய்த பாவை தனக்கு 331
அணியாரே தம்மைத் தமவேனும் கொள்ளாக் கலம் 66
அணியெல்லாம் ஆடையின் பின் 26
அம்பலம் தாழ்க் கூட்டுவார் 55
அம்புவிட்டு ஆக்கறக்குமாறு 166
அயலறியா அட்டூணோ இல் 148
அயிரை யிட்டு வரால் வாங்குபவர் 372
அயிலாலே போழ்ப அயில் 8
அரங்கினுள் வட்டுக்கரை யிருந்தார்க்கு எளிய போர் 176
அரிந்தரிகால் நீர்ப்படுக்குமாறு 299
அரிவாரைக் காட்டார் நரி 30
அழகொடு கண்ணின் இழவு 217
அளறாடிக்கண்ணும் மணி மணியாகிவிடும் 72
அள்ளில்லத்து உண்ட தனிசு 297
அறஞ்செய்ய அல்லவை நீங்கிவிடும் 364
அறிதுயில் யார்க்கும் எழுப்பலரிது 333
அறிமடமும் சான்றோர்க் கணி 74
அறியும் பெரிதாள்பவனே பெரிது 31
அறிவச்சம் ஆற்றப் பெரிது 323
அறிவினை ஊழே அடும் 228
அறுமோ குளநெடிது கொண்டது நீர் 374
அறுமோ நரி நக்கிற்றென்று கடல் 203
ஆகாதார்க்கு ஆகுவ தில் 237
ஆகாதே உண்டது நீலம் பிறிது 94
ஆகுமோ நந்துழுதவெல்லாம் கணக்கு 92
ஆடு பணைப் பொய்க்காலே போன்று 284
ஆயிரம் காக்கைக்கோர் கல் 249
ஆராயானாகித் தெளிந்தான் விளிந்து விடும் 182
ஆலென்னிற் பூலென்னு மாறு 268
ஆற்றக் கரும்பனை யன்ன துடைத்து 220
ஆற்றாதவரழுத கண்ணீரவை அவர்க்குக் கூற்றமாய் வீழ்ந்துவிடும்
ஆற்றுணா வேண்டுவதில்
4
ஆற்றுவான் நூற்றுவரைக் கொன்றுவிடும் 307
இடைதவிர்ந்து வீழ்தலின் நட்டறானாதலே நன்று 366
இடை நாயிற் கென்பிடுமாறு 305
இடையன் எறிந்த மரம் 223
இரந்தூட்குப் பன்மையோ தீது 384
இருதலையும் காக்கழித்தார் 390
இருதலைக் கொள்ளி யென்பார் 141
இருளி னிருந்தும் வெளி 320
இல்லுள் வில்லேற்றி இடைக்கலத் தெய்துவிடல் 24
இல்லை உயிருடையார் எய்தா வினை 239
இல்லையே அட்டாரை ஒட்டாக் கலம் 173
இல்லையே உய்வதற்கு உய்யாவிடம் 234
இல்லையே ஒன்றுக்குதவாத வொன்று 341
இல்லையே தாம்தர வாராஅநோய் 183
இல்லையே யானைதொடு வுண்ணின் மூடுங் கலம் 247
இழவன்று எருது உண்ட உப்பு 172
இழுக்கத்தின் மிக்க இழிவு இல்லை 15
இழுகினா னாகாப்பதில்லையேமுன்னம் எழுதின ஓலை பழுது
160
இளைதென்று பாம்பிகழ்வாரில் 277
இருப்புழிப் பெற்றால் கிடப்புழியும் பெற்றுவிடும் 190
இளையனே ஆயினும் மூத்தானே யாடுமகன் 154
இறக்கு மையாட்டை உடம்படுத்து வௌவுண்டாரில் 170
இறந்தது பேர்த்தறிவாரில் 206
இறைத்தோறும் ஊறும் கிணறு 377
இனங் கழுவேற்றினாரில் 198
இன்சொல் இடர்ப்படுப்பதில் 191
இன்னாது இருவர் உடனாடல் நாய் 18
இன்னாதே பேஎயோடானும் பிரிவு 126
ஈடில்லதற் கில்லை பாடு 71
ஈனுமோ வாழை இருகால் குலை 63
உடுத்தாரை உண்டி வினவுவாரில் 329
உடைஇல் தீயிடு மாறு 317
உண்ணா இரண்டேறு ஒரு துறையுள் நீர் 312
உண்ணுந்துணைக் காக்கும் கூற்று 135
உண்ணோட் டகலுடைப் பார் 163
உமிக்குற்றுக் கைவருந்து மாறு 348
உமையாள் ஒரு பாலாக் கட்டங்கம் வெல்கொடி
கொண்டானும் கொண்டான்
124
உயக்கொண்டு புல்வாய் வழிப்படுவாரில் 179
உயவு நெய்யுட் குளிக்கும் ஆறு 385
உருவு திருவூட்டு மாறு 301
உரைத்தால் உரைபெறுதல் உண்டு 75
உரையார் இழித்தக்க காணிற் கனா 130
உலகினுள் இல்லதற் கில்லை பெயர் 161
உலக்கைமேல் காக்கை என்பார் 157
உவர் நிலம் உட்கொதிக்கு மாறு 289
உவவா தார்க்கு ஈத்ததை யெல்லாம் இழவு 226
உள்ளம் படர்ந்ததே கூறும் முகம் 144
உள்ளிருந்து அச்சாணி தாங்கழிக்கு மாறு 112
உறற்பால தீண்டாவிடுதல் அரிது 230
உறற்பால யார்க்கும் உறும் 229
ஊரறியா மூரியோ இல் 102
ஊர்ந்துருளின் குன்று வழி அடுப்ப தில் 369
ஊர் மேற்றதாம் அமணர்க்கு ஓடு 314
ஊழம்பு வீழா நிலத்து 240
எய்ப்பினில் வைப் பென்பது 358
எருக்கு மறைந் தியானை பாய்ச்சிவிடல் 62
எருத்திடை வைக்கோல் தினல் 278
எருமை எறிந்தொருவர் காயக்கு லோபிக்கும் ஆறு 338
எல்லாம் பொய் அட்டூணே வாய் 349
எழுப்புபவோ துஞ்சு புலியைத் துயில் 281
எளியாரை எள்ளாதாரில் 248
என்றும் மன நலமாகாவாம் கீழ் 90
ஏப் பிழைத்துக் காக்கொள்ளு மாறு 309
ஏமாரார் கோங் கேறினார் 282
ஏவலாள் ஊருஞ் சுடும் 238
ஏற்றுக்கன் றேறாய்விடும் 81
ஒக்கலை வேண்டி அழல் 290
ஒடியெறியத் தீரா பகை 310
ஒருபக்கம் நீரொழுகிப் பாலொழுகு மாறு 213
ஒருவர் பொறை இருவர் நட்பு 321
ஒழுக்கத்தின் மிக்க உயர்வு இல்லை 15
ஒள்ளியக் காட்டு ஆளர்க் கரிது 264
ஒறுக்கல்லா மென் கண்ணன் ஆளான் அரசு 241
ஒன்றுறா முன்றிலோ இல் 381
ஒன்றேற்றி வெண்படைக்கோ ளொன்று 125
262
ஓடுக ஊரோடு மாறு 195
ஓரறையுள் பாம்போ டுடன்உறையும் ஆறு 253
ஓர்த்த திசைக்கும் பறை 37
கடம்பெற்றான் பெற்றான் குடம் 211
கடலுளால் மாவடித்தற்று 25
கடலுள்ளும் காண்பவே நன்கு 197
கடலோடு காட்டொட்ட லில் 78
கடல் நீந்திக் கற்றடியு லாழ்ந்திவிடல் 342
கடல்படா வெல்லாம் படும் 269
கடனன்றோ ஊரறிய நட்டார்க்கு உணா 85
கடிஞையில் கல்லிடுவாரில் 375
கடித்தோடும் பாம்பின் பல் கொள்வாரோ இல் 287
கடிய கனைத்து விடல் 276
கடையடைத்து வைத்துப் புடைத்தக்கால் நாயும்
உடையானைக் கவ்வி விடும்
45
கணையிலும் கூரியவாம் கண் 143
கண்சொரீஇ இட்டிகை தீற்றுபவர் 108
கண்டது காரணமா மாறு 142
கண்ணிற் கண்டதூஉம் எண்ணிச் சொலல் 185
கயவர்க் குரையார் மறை 180
கருக்கினால் கூறை கொள்வார் 321
கல்தேயும் சொல் தேயாது 39
கல்லொடு கை யெறியுமாறு 317
கவுட்கொண்ட நீர் 252
கள்ளினைக் காணாக் களிக்கும் களி 99
கள்ளைக் குடித்துக் குழைவாரோ இல் 266
கழிவிழாத் தோளேற்றுவார் 137
கற்கிள்ளிக் கையுய்ந்தாரில் 48
கற்றலிற் கேட்டலே நன்று 5
கற்றறிவு போகா கடை 28
கற்றொறுந் தான் கல்லாதவாறு 2
கனா முந்துறாத வினை யில்லை 12
காக்கையைக் காப்பிட்ட சோறு 208
காணார் எனச் செய்யார் மாணா வினை 76
காதலோ டாடார் கவறு 356
காப்பாரிற் பார்ப்பார் மிகும் 368
கானகத் துக்க நிலா 139
குடர் ஒழிய மீவேலி போக்குபவர் 219
குடிகெட வந்தால் அடிகெட மன்றிவிடல் 288
குரங்கின்கைக் கொள்ளி கொடுத்துவிடல் 255
குரங்கினுள் நன்முகத்த வில் 104
குருட்டுக்கண் துஞ்சிலென் துஞ்சாக்கா லென் 218
குருவி குறங்கறுப்பச் சோருங் குடர் 337
குலவிச்சை கல்லாமற் பாகம்படும் 6
குவளையைத் தன்னாரால் யாத்துவிடல் 279
குழிப்பூழி ஆற்றா குழிக்கு 396
குழுவத்தார் மேயிருந்த என்றூடறுப்பினு மன்று 60
குளந்தொட்டுத் தேரைவழிச் சென்றாரில் 198
குறுநரிக்கு நல்ல நாராயங் கொளல் 51
குறுமக்கள் காவு நடல் 120
குறும்பியங்கும் கோப்புக்குழிச் செய்வ தில் 227
குறும்பூழ்க்குச் செய்யுளதாகு மனம் 96
குறைப்பர் தம்மேலே வீழப் பனை 280
குன்றின்மேல் இட்ட விளக்கு 80
கூதறைகள் ஆகார் குடி 106
கூரம்பு அடியிழுப்பின் இல்லை அரண் 155
கூரிதெருத்து வலியதன் கொம்பு 271
கூலிக்குச் செய்துண்ணு மாறு 383
கூற்றங் குதித்துய்ந் தறிவாரோ இல் 391
கூற்றம் புறங்கொம்மை கொட்டினாரில் 291
கூன்மேல் எழுந்த குரு 283
கெடுமே கொடும்பாடுடையான் குடி 64
கெட்டார்க்கு நட்டாரோ இல் 134
கைக்குமே தேவரே தின்னினும் வேம்பு 95
கொடுத் தேழையாயினாரில் 377
கொடுப்பவர் தாமறிவார் தஞ்சீ ரளவு 380
கொண்டார் வெகுடல் நகைமேலும் கைப்பாய்விடும் 312
கொல்லிமேல் கொட்டு வைத்தார் 388
கொல்லையுள் கூழ் மரமே போன்று 256
கொற்சேரி துன்னூசி விற்பவரில் 73
சால்பினைச் சால்பறுக்கு மாறு 334
சாவாதான் முன்கைவளையுந் தொடும் 293
சான்றவர் கையுண்டும் கூறுவர் மெய் 83
சான்றோர் அவைப்படின் சாவாது பாம்பு 86
சான்றோர் கடங்கொண்டும் செய்வார் கடன் 82
சிறுகுரங்கின் கையாற் றுழா 306
சீர்ந்தது செய்யாதாரில் 177
சுமையொடு மேல்வைப்பாமாறு 357
சுரத்திடைப் பெய்த பெயல் 373
சுரம்போக்கி உல்குகொண்டாரில் 1
சுரை யாழ அம்மி மிதப்பு 122
சுரையாழ் நரம்பறுத்தற்று 260
சூட்டறுத்து வாயிலிடல் 246
செய்கென்றான் உண்கென்னு மாறு 267
செய்தானை ஒவ்வாத பாவையோ இல் 259
செய்யாத எய்தா வெனின் 56
செய்வதென் வல்லை அரசாட்கொளின் 254
செருப்பிடைப் பட்டபரல் 120
செல்வம் தொகற்பால போழ்தே தொகும் 233
சேணோக்கி நந்து நீர் கொண்டதே போன்று 205
சொல்லாக்கால் சொல்லு வதில் 13
சோரம் பொதியாதவாறு 315
தஞ்சாகாடேனும் உயவாமல் சேறலோ வில் 168
தஞ்சாதி மிக்குவிடும் 142
தட்டாமல் செல்லாது உளி 169
தண்கோ லெடுக்குமா மெய் 250
தந்நீர ராதல் தலை 192
தமக்கு மருத்துவர் தாம் 149
தமரை இல்லார்க்கு நகரமும் காடுபோன்றாங்கு 14
தம்மைத் தாம் ஆர்க்கும் கயிறு 371
தம்மை யுடைமை தலை 187
தயிர் சிதைத்து மற்றொன் றடல் 343
தலையுள் குறுங்கண்ணி யாகிவிடும் 186
தனக்கின்னா இன்னா பிறர்க்கு 44
தனிமரம் காடாத லில் 286
தன்னாசை அம்பாயுள் புக்குவிடும் 392
தாநோன்றிட வரும் சால்பு 59
தாமிருந்த கோடு குறைத்துவிடல் 346
தாயர் அலைத்துப் பால் பெய்து விடல் 363
தாயர்க்கு மக்களுள் பக்கமோ வேறு 332
தாய் மிதித்த ஆகா முடம் 353
தால வடைக்கலமே போன்று 87
தாறாப்படினும் தலைமகன் தன்னொளி நூறாயிரவர்க்கு நேர் 69
திங்களை நாய் குரைத்தற்று 107
திருவினும் திட்பம் பெறும் 33
திருவுடையார் பண்டம் இருவர் கொளல் 199
திருவோடும் இன்னாது துச்சு 355
திரையவித் தாடார் கடல் 381
தினலாமோ அக்காரம் சேர்ந்த மணல் 19
தீங்குரைக்கு நாவிற்கு நல்குர வில் 42
தீநாய் எழுப்புமாம் எண்கு 292
தீநாள் திருவுடையார்க் கில் 235
தீயன ஆவதே போன்று கெடும் 213
தீ யில்லை யூட்டும் திறம் 58
தீற்றாதோ நாய்நட்டால் நல்ல முயல் 128
துளியீண்டில் வெள்ளந் தரும் 201
துறவா உடம்பினான் என்ன பயன் 389
துன்னினா ரல்லார் பிறர் 352
துன்னூசி போம்வழி போகு மிழை 354
தெளியானைத் தேற லரிது 52
தேனார் பலாக்குறைத்துக் காஞ்சிரை நட்டுவிடல் 104
தொட்டாரை ஒட்டாப் பொருள் இல்லை 173
தொளை யெண்ணார் அப்பந் தின்பார் 165
தோற்பன கொண்டு புகார் அவை 17
நகையாகும் யானைப்பல் காண்பான் புகல் 22
நசை கொன்றான் செல் உலக மில் 225
நரகர்கட் கில்லையோ நஞ்சு 120
நரிக்கூஉக் கடற் கெய்தாவாறு 316
நரியிற்கூண் நல்யாண்டும் தீ பாண்டு மில் 101
நல்ல விறகின் அடினும் நனிவெந்நீர் இல்லம் சுடுகலாவாறு 51
நல்லறம் செய்வது செய்யாது கேள் 367
நற்காப்பின் தீச்சிறையே நன்று 207
நன்றொடு வந்ததொன் றன்று 294
நாய் காணின் கற்காணா வாறு 361
நாய் கொண்டால் பார்ப்பாரும் தின்பர் உடும்பு 35
நாய் கௌவின் பேர்த்து நாய் கௌவினாரில் 49
நாய் பெற்ற தெங்கம்பழம் 217
நாய்மேல் தவிசிடு மாறு 105
நாய்வால் திருந்துதல் என்றுமோ இல் 336
நாளும் கடலுள் துலாம்பண்ணினார் 330
நாவற்கீழ்ப் பெற்ற கனி 11
நாவிதன் வாள் சேப்பிலைக்குக் கூர்த்துவிடல் 319
நிறைபுள்ளே இன்னா வரைவு 68
நிறைகுடம் நீர் தளும்ப லில் 9
நின்றது சென்றது பேராதவர் 152
நின்நடை நின்னின் றறிகிற்பாரில் 36
நீத்தம் மலைப்பெயல் காட்டுந் துணை 258
நீரற நீர்ச்சாவு அறும் 397
நீர்போயும் ஒன்றிரண்டாம் வாணிகம்இல் 344
நீர் மிகின் இல்லை சிறை 305
நீர் வரைய வாம் நீர்மலர் 379
நீள் கயத்துள் யாமை நனைந்துவா என்று விடல் 175
நுகத்துப் பகலாணி போன்று 339
நுணலுந் தன் வாயால் கெடும் 114
நெடும்பகை தற்செய்யத் தானே கெடும் 53
நெடுவேள் கெடுத்தான் குடத்துளும் நாடிவிடும் 193
நெய்தலைப் பால் உக்கு விடல் 31
நெய்பெய்த கலனே நெய் பெய்துவிடும் 272
நோவச் செய் நோயின்மை யில் 43
நோற்றார்க்குச் சோற்றுள்ளும் வீழும் கறி 236
பசிபெரி தாயினும் புன்மேயாதாகும் புலி 70
பசுக் குத்தின் குத்துவாரில் 57
படையின் படைத்தகைமை நன்று 325
பயின்றது வானக மாகிவிடும் 398
பரிசழிந்தாரோடு தேவரு மாற்ற லிலர் 20
பலிப்புறத் துண்பார் உணா 295
பல்கட்டப் பெண்டீர் மகார் 394
பழஞ்செய் போர் பின்றுவிடல் 221
பள்ளியுள் ஐயம் புகல் 224
பழம் பகை நட்பாத லில் 296
பறைக்கண் கடிப்பிடு மாறு 178
பனியால் குளநிறைத லில் 127
பனைப் பதித் துண்ணார் பழம் 187
பனை முதிரின் தாய்தாண்மேல் வீழ்ந்துவிடும் 270
பனையின்மேல் பஞ்சிவைத் தெஃகிவிட்டற்று 181
பன்மையின் பாடுடைய தில் 303
பாண்சேரிப் பற்கிளக்கு மாறு 21
பாம்பறியும் பாம்பின கால் 7
பாய்பவோ வெந்நீரும் ஆடாதார் தீ 159
பால்தலைப் பாலூற லில் 245
பிணியீ டழித்துவிடும் 40
பிரம்பூரி என்றும் பதக்கே வரும் 399
பிறரைக் கள்ளராச் செய்குறுவார் 117
பின்னின்னா பேதையார் நட்பு 138
புதற்குப் புலியும் வலியே புலிக்குப் புதலும் வலியாய்விடும் 200
புலத்தகத்துப் புள்ளரைக்கால் விற்பே மெனல் 65
புலப்புல வண்ணத்த புள் 146
புலித்தலையை நாய் மோத்த லில் 204
புலிமுகத் துண்ணி பறித்துவிடல் 109
புலிமுன்னர்ப் புல்வாய்க்குப் போக்கில் 265
புலைப்பொருள் தங்கா வெளி 340
புல்லத்தைப் புல்லம் புறம்புல்லு மாறு 26
புழுப்பெய்து புண் பொதியு மாறு 113
புறத்தமைச்சின் நன்றகத்துக் கூன் 275
பூசை எலி யில்வழிப் பெறா பால் 324
பூசையைக் காப்பிடுதல் புன்மீன் றலை 170
பூண்ட பறை யறையார் போயினாரில் 84
பூவோடு நாரியைக்கு மாறு 88
பெண் பெற்றான் அஞ்சான் இழவு 382
பெய்யுமாம் பெய்யா தெனினும் மழை 351
பெரிதகழின் பாம்புகாண்பாரும் உடைத்து 328
பெரிது உக்கு ஓடிக் காட்டிவிடும் 158
பெரியதன் ஆவி பெரிது (க.வா.)
பெரியவான் ஆற்றவும் முன்கை நெடியார்க்குத் தோள் 156
பெரியாரைச் சார்ந்து கெழிஇயிலாரில் 257
பெரும் பழியும் பேணாதார்க் கில் 41
பேதைக் குரைத்தாலும் தோன்றா துணர்வு 93
பைங்கரும்பு மென்றிருந்து பாகுசெயல் 359
பொருந்தா மண் ஆகா சுவர் 110
பொருள் கொடுத்துக் கொள்ளார் இருள் 3
பொறியும் தொடர்பாலாற் கண்ணே தொடும் 231
போகாதே நாய் பின்னதாகத் தகர் 304
போகாரே நீர் குறிதாகப் புகல் 189
போமாறறியா புலன்மயங்கி ஊர்புக்குச் சாமா கண்காணாதவாறு
61
மகனறிவு தந்தை யறிவு 145
மகன் மறையாத் தாய் வாழுமாறு 322
மச்சேற்றி ஏணி களைவு 136
மதிப்புறத்துப் பட்ட மறு 10
மதியம்போல் பன்மீனும் காய்கலா வாகு நிலா 27
மயில்போலுங் கள்வ ருடைத்து 194
மரங்குறைப்ப மண்ணா மயிர் 215
மரத்தின்கீழ் ஆகா மரம் 251
மரம் போக்கிக் கூலிகொண்டார் இல்லை 1
மறையார் மருத்துவர்க்கு நோய் 133
மற்றதன்பாற் றேம்பல் நன்று 171
மன்றஞ்சுவார்க்குப் பரிகாரம் யாதொன்றும் மில் 118
மன்றத்து மையல் சேர்ந்தற்று 119
மனை மரமாய மருந்து 350
மாக்காய்த்துத் தன்மேல் குணில் கொள்ளுமாறு 214
மாயா நரையான் புறத்திட்ட சூடு 79
மிக்கவை மேவிற் பரிகார மில் 387
மிளகுளு வுண்பான் புகல் 23
முடவன் பிடிப்பூணி யானையோடாடல் உறவு 16
முதலிலார்க்கு ஊதிய மில் 232
முயல் விட்டுக் காக்கை தினல் 370
முலையிருப்பத் தாயணல் தான்சுவைத் தற்று 274
முழங்குறைப்பச் சாணீளுமாறு 100
முழநட்பிற் சாணுட்கு நன்கு 129
முழந்தாள் கிழிந்தானை மூக்குப் பொதிவு 19
393
முள்ளினால் முட்களையு மாறு 308
முறைமைக்கு மூப்பிளமை யில் 242
முனிவில்லார் முன்னியது எய்தாமை யில் முன்பகல் கண்டான் பிறன்கேடு தன்கேடு 153
பின்பகல் கண்டுவிடும் 46
முன்னின்னா மூத்தார் வாய்ச் சொல் 263
மூக்கற்றதற் கில் பழி 115
மூரி உழுது விடல் 162
மூரியைத் தீற்றிய பல் 209
மைம்மைப்பின் நன்று குருடு 298
மோரின் முதுநெய் தீதாகலோ வில் 89
யாதானும் ஒன்றுகொண்டு யாதானும் செய்தக்கால் யாதானும் ஆகிவிடும்
154
யாப்பினுள் அட்டிய நீர் 311
யாரானும் சொற் சோராதாரோ இலர் 184
யாரே நமநெய்யை நக்குபவர் 345
யாருளரோ தங்கன்று சாக்கறப்பர் 131
யானைபோய் வால் போகா வாறு 395
யானையால் யானையாத் தற்று 29
வண்டுதா துண்டுவிடல் 244
வருந்தாதார் வாழ்க்கை திருந்துத லின்று 151
வலியலாந் தாக்கு வலிது 302
வளிதோட் கிடுவாரோ இல் 116
வாங்கும் எருதாங் கெழா அமைச் சாக்காடெழில் 313
வாடியக்கண்ணும் பெருங்குதிரை யாப்புள வேறாகிவிடும் 376
வாயுறைப் புற் கழுத்தில் யாத்துவிடல் 222
வாழைக்காய் உப்புறைத்த லில் 326
விண்டற்கு விண்டல் மருந்து 140
விண்ணியங்கும் ஞாயிற்றைக் கைம்மறைப்பாரில் 32
வித்தின்றிச் சம்பிரத மில் 322
விரையிற் கருமம் சிதையும் 164
வில்லொடு காக்கையே போன்று 77
விளக் கெலி கொண்டு தனக்கு நோய் செய்துவிடல் 14
வினா முந்துறாத உரை யில்லை 12
வெண்ணெய் மேல்வைத்து மயில் கொள்ளுமாறு 210
வெண்பாட்டம் வெள்ளந் தரும் 300
வெண்மாத் தலைகீழாக் காதிவிடல் 111
வெந்நீரில் தண்ணீர் தெளித்து 162
வெள்ளாடு தன்வளி தீராது அயல்வளி தீர்த்துவிடல் 38
வேண்டாமை வேண்டிய தெல்லாந் தரும் 273
வேள்வாய் கவட்டை நெறி 360
வேற்குத்தின் காணியின் குத்தே வலிது 196