ஐந்திணையைம்பது துறை, சொற்றொடர் விளக்கம். எண் - பக்கவெண் |
||
புள்ளியிடுதல் | ஐந்தொகை முதலிய பெருங் கணக்குக ளிட்டுப் பார்த்தல் | - |
முல்லை | முல்லையாகிய ஒழுக்கம்; தலைவன் பிரிவாலுண்டாம் வருத்தத்தினை தலைவி பொறுத்து, அவன் கற்பித்தவாறே அடக்கத்தினை மேற்கொண்டிருத்தல் | |
மல்லர்க்கடந்தான் | முல்லைநிலக் கருப்பொருள் | 3 |
பணிமொழி | இன்சொற்கள்; அன்றி, ஆற்றியிருக்குமாறு பணித்த சொற்கள் | 6 |
புன்மாலை | முல்லைத்திணையின் முதற்பொருள் | 8 |
வினைமுற்றல் | சென்ற காரியத்தைச் செய்து முடித்தல் | 11 |
பகற்குறி | தோழி தலைவிக்குக் குறையிரந்து நின்ற தலைவன் செய்தி கூறிக் கூட்டத்திற்குத் தலைவியை இணங்குவித்த பிறகு, தினைப்புனத்தை யடுத்த சோலையினுள்ள ஓரிடத்தைத் தலைவனுக்குக் குறிப்பிட்டுக் கூறித் தலைவியைக் கொண்டு சேர்க்குமிடம் | 12 |
சிறைப்புறம் | வேலியின் வெளிப்புறம் | 12 |
நலம்புனைதல் | தலைவியின் உயர்ந்த தன்மைகளை எடுத்துச் சொல்லல். இது புணர்ச்சியின் பின் நிகழ்வதாகும் | 12 |
குறிஞ்சி | குறிஞ்சியாகிய வொழுக்கம்; புணர்தலும் புணர்த னிமித்தமும் | 12 |
நன்மலை | தலைவனது நாட்டுமலை | 14 |
இயற்பட மொழிதல் | உயர்புபடக் கூறல் | 14 |
இயற்பழித்தல் | குறைவுபடக் கூறல் | 14 |
குறைநயப்பு | தலைவன் தனது குறையாகிய வேண்டுகோளை நிறைவேற்றி வைக்கும்படி தோழியை வேண்டிக் கொள்வது | 15 |
மெலிதாக | நயமாக | 15 |
மறுமாற்றம | விடை | 16 |
படைத்துமொழி கிளவி | புதிதாக வொன்றைக் கற்பித்துக் கூறுவது | 16 |
வரைவு கடாதல் | மணம்புரிந்துகொள்ளும்படி தூண்டுதல் | 16 |
இரவுக்குறி | தலைவனும் தலைவியும் இரவில் சந்தித்துக் கூடுமிடம். இது தலைவியின் வீட்டினை யடுத்திருப்பதாம் | 18 |
நெறிவிலக்கல் | வழியின தருமைகூறி, அவ்வழி வாராதிருக்க வேண்டல் | 20 |
அறத்தொடு நிற்றல் | தவறுதலான கருத்தோடு காரியங்களை நடத்தவிடாமல் உண்மையினை எடுத்துக் கூறிவிடுவது | 21 |
வெறிவிலக்கல் | முருகனுக்குப் பூசையிடுதல் தேவையில்லாத வொன்றெனத் தோழி முதலியோர் உண்மைகூறித் தடுத்தல் | 21 |
பாணன் | யாழ்கொண்டு பாட்டுப்பாடித் தலைவனை மகிழ்விக்கும் தலைவனின் ஏவலன் | 22 |
மருதம் | ஊடுதலும், ஊடுத னிமித்தமுமாகிய வொழுக்கம் | 22 |
வாயில் வேண்டல் | தூதாகச் செல்ல விரும்பல் | 26 |
கூந்தல் ஐவகை | குழல், கொண்டை, சுருள், பனிச்சை, முடி | 27 |
பாலை | பிரிதலும், பிரித னிமித்தமுமாகிய வொழுக்கம் | 31 |
செலவு அழுங்கல் | செல்லுதலினின்றும் தவிர்ந்து வருந்தல் | 33 |
ஆட்டிவிடல் | ஓட்டல்; திசைச்சொல்; மலைநாட்டது | 33 |
பிரிவுணர்த்தல் | தலைவன் பிரிவினைத் தலைவிக்குத் தோழி தெரிவித்தல் | 35 |
வலித்தல் | இன்றியமையாதென நினைத்தல் | 37 |
அல்லகுறி | தலைவன் (இரவுக் குறியின்கண் வந்தவுடன் தன் வரவினைத் தலைவிக்குந் தோழிக்குந் தெரிவிப்பான் வேண்டிப் பூஞ்சோலை மரங்களில் கூடித் தங்கியிருக்கும் பறவைக் கூட்டங்களை யெழுப்பி விட்டாவது, குளக்கரையிலுள்ள தென்னை முதலியவற்றின் காய்களைப் பறித்து நீரிலிட்டாவது ஒலி யுண்டாக்குவன்.) சில நாட்களில், தலைவன் வருவதற்கு முன்னரே வேறுவகையில் இவ்வொலி யெழும்பல் கூடும். அவ்வேளை தோழி தலைவியுடன் வந்து தலைவனைக் காணாது தலைவியுடன் திரும்புவள். அஃதே அல்லகுறி. | |
நெய்தல் | இரங்கலும், இரங்க னிமித்தமுமாகிய வொழுக்கம் | 39 |
கூடலிழைப்பு | பெரும் வட்டமாக ஒரு கோட்டைக் கீறி, அதற்குள்ளே சிறு சுழிகள் பலவற்றை நிறையச் சுழித்து முடித்து, பின் அச்சுழிகளை இவ்விரண்டாக எண்ணி, ஒன்று மிஞ்சினால் தலைவன் விரைவிற் கூடானென்றும், மிஞ்சாது இரட்டையாக அமைந்தால், விரைவிற் றலைவன் வந்து கூடுவனென்றுங் கருதலாகிய பழைய வழக்கம் | 41 |
மணியரவம் | இரவுக்குறி | 47 |
புள் அரவம் | அல்லகுறி | 47 |