முகவுரை
நம் பண்டைத் தமிழ் மக்கள் தாய்மொழியாகிய தமிழினை முச்சங்கத்திருத்தி முதன்மையுற வளர்த்தன ரென்பதும், கடல் கோள் சிலவான் அவர்தம் மொழிச் சிறப்பும் வழிச் சிறப்பும் முட்டின்றி யறிய, வொண்ணாது ஆழ்கடலகத்தே யமிழ்ந்த வென்பதும், அவற்றுட் சில, நம்மனோரின் நற்றவப்பேற்றாற் கிடைத்துள்ள சங்கநூல்களிற் கண்டு களிக்குங் கவினுடன் காணப்படுகின்றன வென்பதும் அறிஞர்கள் பலர் அகமுறக் கண்டனவாம். முச்சங்கங்களிற் கண்ட பல நூல்களிற் கிடைத்த சிலவே, பிற்காலத்தில் வச்சிரநந்தி யென்பார் கண்ட நான்காஞ் சங்கத்தாரால் மேற்கணக்கு, கீழ்க்கணக்கு என்ற தொகை முறைப்படி வகுக்கப்பட்டு வழங்கி வரலாயின. மேற்கணக்கைச் சார்ந்த நூல்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்ற உட்பிரிவுகளையுடைய பதினெட்டுமாம். மேற்கணக்கின் இலக்கணத்தினை,
“ஐம்பது முதலா வைந்நூ றீறா
வைவகைப் பாவும் பொருணெறி மரபிற்
றொகுக்கப் படுவது மேற்கணக் காகும்,”
என்ற பன்னிரு பாட்டியற் சூத்திரத்தா லறியலாம்.
கீழ்க்கணக்கைச்
சார்ந்த நூல்கள் (1) நாலடியார், (2) நான்மணிக் கடிகை, (3) இனியது நாற்பது, (4) இன்னா நாற்பது ; (5) களவழி நாற்பது, (6) கார் நாற்பது, (7) ஐந்திணை யைம்பது, (8) ஐந்திணை யெழுபது, (9) திணைமொழி யைம்பது, (10) திணைமாலை நூற்றைம்பது, (11) திருக்குறள், (12) திரிகடுகம், (13) ஆசாரக் கோவை, (14) பழமொழி, (15) சிறுபஞ்சமூலம், (16) முதுமொழிக் காஞ்சி, (17) ஏலாதி, (18) கைந்நிலை என்பனவாம். இக் கீழ்க்கணக்கின் இலக்கணம்
இரண்டடி
|