பட்டது.
இருபத்தெட்டாவது செய்யுட்கண், “பெயரும்,” என்பதும், முப்பத்தெட்டாவது செய்யுட்கண், “கொடுவரிநல்,” என்பதும் ஏடுகளின் சிதைவாற் காணப் பெறாது போயினவற்றிற்குரியவாக, முன்பின் வருமொழிகளின்
துணைகொண்டு புதியனவாகச் சேர்க்கப்பட்டனவாம்.
இந்நூல்
எளிய முறையில் எல்லோர்க்கும் பயன்பட வேண்டுமென்ற
நல்லெண்ணத்தினானே ஊக்குவிக்கப்பட்டுப் பதவுரை விரிவுரைகளுடன் இங்ஙனம் வெளியிட முன் வந்தமையின், இதனைக் கண்ணுறும் அறிஞர்கள் யான் அறியாமையான் மேற்கொண்டுள்ள பிழைகளை யெடுத்துக்காட்டி மன்னிக்க வேண்டுகின்றனன். தோன்றாத் துணையாக முன்னின்று இதனை முடிப்பித்த எல்லாம் வல்ல இறைவற்கு எனது வணக்கம் உரித்தாகுக. இதனை வெளியிட்டுதவிய
தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்க்கும், இதனை வெளியிடுங்கால் அன்பு கூர்ந்து பார்வையிட்டுத் திருத்தங்கள் செய்து உதவிய மேற்படி கழக வெளியீட்டுக் குழுவுறுப்பினரும், பாளையங் கோட்டை அர்ச் சவேரியர் கல்லூரித் தலைமைத் தமிழாசிரியரும் ஆகிய திருவாளர்
வித்வான் பு. சி. புன்னைவனநாத முதலியாரவர்கட்கும் யான்
என்றும் நன்றி பாராட்டுங் கடப்பாடுடையேன்.
இங்ஙனம்,
அ. நடராச பிள்ளை. |