திணைமொழி
ஐம்பது திணை, துறை, தொடர்விளக்க அகரவரிசை [எண் : பாட்டெண்] |
||
அஞ்சி அச்சுறுத்துவது | தலைமகற்கு வழிக்கண் உண்டாம்
இடையூறுகட்குப் பயந்து, தலைமகனை இரவில் வர வேண்டா என இடையூறுகளை எடுத்துக்காட்டித் தோழி கூறுவது |
1 |
இரந்துபின்நிற்றல் | தலைமகன் தன் குறையினைக் கூறித் தோழியினைத் தொடர்ந்து செல்லல் |
8 |
இரவுக்குறி | இராக் காலத்தே தலைமகனும், தலைமகளும் எதிர்ப்பட்டுக் கூடுமிடம். இது தலைமகளின் வீட்டினையடுத்த தோப்பின் கண்ணதாம் |
7, 9 |
எங்கையர் | தங்கைமார்கள்; பரத்தையர்; தலைமகட்குப் பின்னர்த் தோன்றித் தன்னைப்போல் தலைமகனோடு வாழ்தலின், அவர்களைத் தலைமகள், “எங்கையர்” எனலாயினள் |
37 |
காஞ்சி | ஒருவகை மரம்; மருதநிலக் கருப்பொருள் | 33 |
குரலேறு | ஆண் இடி | 28 |
குறி | தலைமகன் தன் வருகையை அறிவிக்கும்வண்ணம்செய்யும் சில குறிப்புகள் |
43 |
குறிஞ்சி | புணர்தலும், புணர்தனிமித்தமும் | 1 |
செறிப்பு | வீட்டினிடங் கொண்டு சேர்த்தல் | 2 |
சேட்படுத்தல் | விலக்கல் | 5 |
சேட்படை | தலைமகளைத் தலைமகன் அணுகவிடாமல் தோழி
விலக்கல். சேண்மை + படை = சேட்படை ; சேய்மைக்கண் படுத்தல் |
8 |
நெய்தல் | இரங்கலும், இரங்க னிமித்தமும் | 41 |
பாலை | பிரிதலும், பிரித னிமித்தமும் | 14 |
பின்நிற்றல் | தோழியைக் குறைஇரைந்து தொடர்ந்துபோதல் | 5 |
முல்லை | கற்பாற்றி யிருத்தலும், அதற்குரிய நிமித்தங்களுமாம் | 21 |
வரைவு கடாதல் | மணம் புரியத் தூண்டல் | 7 |
வரைவுமலிதல் | மணவினையை மேற்கொண்டு தலைமகன் முதலோர் தலைமகளின் பெற்றோர்மாட்டு மணம் பேசிவரல் |
21 |
வற்புறுத்தல் | தலைமகன் வரவுக்குரிய வேதுக்களை எடுத்துக்காட்டி வருத்தமுறா திருக்கும்படி கட்டாயப் படுத்திக்கூறல் |
22 |
வாயில் நேர்தல் | தலைமகள்பால் தூதுசென்று கூட்டுவிக்க இணங்குதல் | 36 |
வேண்டாத | உடன்படாத | 11 |