என்ற பாட பேதமும், நூற்று ஐம்பத்து மூன்றாவது செய்யுட்கு, 'நோக்கென்',
என்ற பாட பேதமும் மேற்கொள்ளப்பட்டன.
இந்நூல் எளிய
முறையில் எல்லோர்க்கும் பயன்பட வேண்டு மென்ற
நல்லெண்ணத்தினானே ஊக்குவிக்கப்பட்டுப் பதவுரை விரிவுரைகளுடன் இங்ஙனம் வெளியிட முன்வந்தமையின், இதனைக் கண்ணுறும் பெரியோர்கள் யான் அறியாமையாற் கொண்டுள்ள பிழைகளை எடுத்துக் காட்டி மன்னிக்க வேண்டுகின்றனன். தோன்றாத் துணையாக முன்னின்று இதனை முடிப்பித்த எல்லாம் வல்ல இறைவற்கு எனது வணக்கம் உரியதாகுக! இதனை வெளியிட்டுதவிய தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்க்கும், இதனை வெளியிடுங்கால் அன்புகூர்ந்து பார்வையிட்டுத் திருத்தங்கள் செய்தும், செய்யுள் முதற்குறிப்பகராதி, அருஞ்சொற் பொருளகராதி, துறை சொற்றொடர் விளக்கம் இவற்றையமைத்தும் உதவிய மேற்படி கழக வெளியீட்டுக் குழுவுறுப்பினரும், பாளையங்கோட்டை அர்ச் சவேரியர் கல்லூரித் தலைமைத் தமிழாசிரியரும் அகிய திருவாளர் வித்துவான். பு. சி. புன்னைவனநாத முதலியாரவர்கட்கும் யான்
என்றும் நன்றி பாராட்டுங் கடப்பாடுடையேன்.
|