|
|||||
|
மதுரைக்
காண்டம்
|
4. ஊர் காண் காதை
|
"சூரியன் உதித்தல" |
||
|
5 |
புறஞ்சிறைப் பொழிலும்,
பிறங்கு நீர்ப் பண்ணையும், இறங்கு கதிர்க் கழனியும், புள் எழுந்து ஆர்ப்ப; புலரி வைகறைப் பொய்கைத் தாமரை மலர் பொதி அவிழ்த்த உலகு தொழு மண்டிலம் வேந்து தலை பனிப்ப, ஏந்து வாள் செழியன் ஓங்கு உயர் கூடல் ஊர் துயில் எடுப்ப- |
உரை உரை |
| "காலை முரசத்தின் ஒலி" |
||
|
10 |
நுதல் விழி நாட்டத்து
இறையோன் கோயிலும் உவணச் சேவல் உயர்த்தோன் நியமமும், மேழி வலன் உயர்த்த வெள்ளை நகரமும், கோழிச் சேவல் கொடியோன் கோட்டமும். அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும், மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும், வால் வெண் சங்கொடு வகை பெற்று ஓங்கிய காலை முரசம் கனை குரல் இயம்ப- |
உரை உரை உரை உரை உரை உரை உரை |
|
"மதுரை நகரைக் காணவேண்டும் என்னும் தனது விருப்பத்தைக் கவுந்தி அடிகளிடம் கோவலன் தெரிவித்தல்" |
||
|
15
20 |
கோவலன் சென்று, கொள்கையின்
இருந்த கவுந்தி ஐயையைக் கைதொழுது ஏத்தி, ‘நெறியின் நீங்கியோர் நீர்மையேன் ஆகி, நறு மலர் மேனி நடுங்கு துயர் எய்த, அறியாத் தேயத்து ஆர் இடை உழந்து, சிறுமை உற்றேன், செய் தவத்தீர்! யான்: தொல் நகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு என் நிலை உணர்த்தி, யான் வரும்காறும், பாதக் காப்பினள் பைந்தொடி; ஆகலின், ஏதம் உண்டோ, அடிகள்! ஈங்கு?’ என்றலும்- |
உரை உரை உரை |
|
"கவுந்தி ஆறுதல் மொழி கூறி, ஊர் கண்டு வருமாறு பணித்தல்" |
||
|
25
30 35 40 45 50 55 60 |
கவுந்தி கூறும்: ‘காதலி-தன்னொடு
தவம் தீர் மருங்கின் தனித் துயர் உழந்தோய்! “மறத்துறை நீங்குமின்; வல் வினை ஊட்டும்” என்று, அறத்துறை மாக்கள் திறத்தின் சாற்றி, நாக் கடிப்பு ஆக வாய்ப்பறை அறையினும், யாப்பு அறை மாக்கள் இயல்பின் கொள்ளார்; தீது உடை வெவ் வினை உருத்தகாலை, பேதைமை கந்தாப் பெரும் பேது உறுவர்; ஒய்யா வினைப் பயன் உண்ணும்காலை, கையாறு கொள்ளார் கற்று அறி மாக்கள்; பிரிதல் துன்பமும், புணர்தல் துன்பமும், உருவிலாளன் ஒறுக்கும் துன்பமும், புரி குழல் மாதர்ப் புணர்ந்தோர்க்கு அல்லது, ஒரு தனி வாழ்க்கை உரவோர்க்கு இல்லை; பெண்டிரும் உண்டியும் இன்பம் என்று உலகில் கொண்டோர் உறூஉம் கொள்ளாத் துன்பம் கண்டனர் ஆகி, கடவுளர் வரைந்த காமம் சார்பாக் காதலின் உழந்து, ஆங்கு, ஏமம் சாரா இடும்பை எய்தினர் இன்றே அல்லால், இறந்தோர் பலரால்; தொன்றுபட வரூஉம் தொன்மைத்து, ஆதலின்: தாதை ஏவலின் மாதுடன் போகி, காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன் வேத முதல்வன் பயந்தோன் என்பது நீ அறிந்திலையோ? நெடுமொழி அன்றோ? வல் ஆடு ஆயத்து, மண், அரசு, இழந்து; மெல்லியல்-தன்னுடன் வெங் கான் அடைந்தோன் காதலின் பிரிந்தோன் அல்லன்: காதலி தீதொடு படூஉம் சிறுமையள் அல்லள்: அடவிக் கானகத்து ஆய்-இழை-தன்னை இடை இருள் யாமத்து இட்டு நீக்கியது வல் வினை அன்றோ? மடந்தை-தன் பிழை எனச் சொல்லலும் உண்டேல், சொல்லாயோ? நீ அனையும் அல்லை; ஆய்-இழை-தன்னொடு பிரியா வாழ்க்கை பெற்றனை அன்றோ? வருந்தாது ஏகி, மன்னவன் கூடல்; பொருந்து உழி அறிந்து போது ஈங்கு’ என்றலும்- |
உரை உரை உரை உரை உரை உரை உரை உரை |
|
"சுருங்கை வீதி வழியாகச் செல்லுதல்" |
||
|
65 |
இளை சூழ் மிளையொடு வளைவுடன்
கிடந்த இலங்கு நீர்ப் பரப்பின் வலம் புணர் அகழியில் பெரும் கை யானை இன நிரை பெயரும் சுருங்கை வீதி மருங்கில் போகி- |
உரை |
| " மதில் வாயிலைக் கடந்து, அகநகரின் எல்லையைச் சார்தல்" |
||
| கடி மதில் வாயில் காவலின்
சிறந்த அடல் வாள் யவனர்க்கு அயிராது புக்கு-ஆங்கு, ஆயிரம் கண்ணோன் அருங்கலச் செப்பு வாய் திறந்தன்ன மதில் அக வரைப்பில்- |
உரை உரை |
|
|
"கடை கழி மகளிரின் பொழுது போக்கு காலைப் பொழுதைக் கழித்தல்" |
||
|
70
75 |
குட காற்று எறிந்து, கொடி
நுடங்கு மறுகின் கடை கழி மகளிர் காதல் அம் செல்வரொடு வரு புனல் வையை மருது ஓங்கு முன் துறை விரி பூந் துருத்தி வெண் மணல் அடைகரை ஓங்கு நீர் மாடமொடு நாவாய் இயக்கி, பூம் புணை தழீஇ, புனல் ஆட்டு அமர்ந்து- |
உரை |
|
"நண்பகலில் பொழுதுபோக்கு" |
||
|
80 |
தண் நறு முல்லையும், தாழ்
நீர்க் குவளையும், கண் அவிழ் நெய்தலும், கதுப்பு உற அடைச்சி; வெண் பூ மல்லிகை விரியலொடு தொடர்ந்த தண் செங்கழுநீர்த் தாது விரி பிணையல் கொற்கை அம் பெரும் துறை முத்தொடு பூண்டு; தெக்கண மலயகச் செழுஞ் சேறு ஆடி, பொன் கொடி மூதூர்ப் பொழில் ஆட்டு அமர்ந்து-ஆங்கு- |
உரை |
|
"அந்திப் பொழுதைக் கழித்தல்" |
||
|
85
|
எல்
படு பொழுதின் இள நிலா முன்றில், தாழ்தரு கோலம் தகை பாராட்ட, வீழ் பூஞ் சேக்கைமேல் இனிது இருந்து-ஆங்கு- |
உரை |
|
"கடை கழி மகளிர் காலத்திற்கு ஏற்ற இன்பங்களில் ஈடுபடுதல் கார் காலம்" |
||
|
90 95 |
அரத்தப் பூம் பட்டு
அரைமிசை உடீஇ,
குரல் தலைக் கூந்தல் குடசம் பொருந்தி, சிறுமலைச் சிலம்பின் செங் கூதாளமொடு நறு மலர்க் குறிஞ்சி நாள் மலர் வேய்ந்து, குங்கும வருணம் கொங்கையின் இழைத்து, செங் கொடுவேரிச் செழும் பூம் பிணையல் சிந்துரச் சுண்ணம் சேர்ந்த மேனியில் அம் துகிர்க் கோவை அணியொடு பூண்டு, மலைச் சிறகு அரிந்த வச்சிர வேந்தற்குக் கலி கெழு கூடல் செவ்வணி காட்ட, கார் அரசாளன் வாடையொடு வரூஉம் காலம் அன்றியும்- |
உரை |
|
"கூதிர்க் காலம்" |
||
|
100 |
நூலோர் சிறப்பின், முகில் தோய் மாடத்து; அகில் தரு விறகின் மடவரல் மகளிர் தடவு நெருப்பு அமர்ந்து; நறுஞ் சாந்து அகலத்து நம்பியர்-தம்மொடு குறுங்கண் அடைக்கும் கூதிர்க் காலையும்- |
உரை |
|
"முன்பனிக் காலம்" |
||
|
105 |
வள மனை மகளிரும் மைந்தரும்
விரும்பி, இள நிலா முன்றிலின் இள வெயில் நுகர, விரி கதிர் மண்டிலம் தெற்கு ஏர்பு, வெண் மழை அரிதின் தோன்றும் அச்சிரக் காலையும்- |
|
|
"பின்பனிக் காலம்" |
||
|
110 |
ஆங்கு அது அன்றியும்,
‘ஓங்கு இரும் பரப்பின் வங்க ஈட்டத்துத் தொண்டியோர் இட்ட அகிலும், துகிலும், ஆரமும், வாசமும், தொகு கருப்பூரமும், சுமந்துடன் வந்த கொண்டலொடு புகுந்து, கோமகன் கூடல் வெங் கண் நெடு வேள் வில்விழாக் காணும் பங்குனி முயக்கத்துப் பனி அரசு யாண்டு உளன்?- |
உரை உரை |
|
"இளவேனிலை வரவேற்றல்" |
||
|
115 |
கோதை மாதவி கொழுங்கொடி
எடுப்ப காவும் கானமும் கடிமலர் ஏந்த, தென்னவன் பொதியில் தென்றலோடு புகுந்து, மன்னவன் கூடல் மகிழ் துணை தழூஉம் இன் இளவேனில் யாண்டு உளன்கொல்?’ என்று, உருவக் கொடியோர் உடைப்பெரும் கொழுநரொடு பருவம் எண்ணும் படர் தீர் காலை- |
உரை உரை |
|
"வேனில் காலக் கடை நாளில் பொழுது போக்கு" |
||
|
120
125 130 135 140 145 |
கன்று அமர் ஆயமொடு களிற்றினம்
நடுங்க என்றூழ் நின்ற குன்று கெழு நல் நாட்டுக் காடு தீப் பிறப்ப, கனை எரி பொத்தி, கோடையொடு புகுந்து, கூடல் ஆண்ட வேனில் வேந்தன் வேற்றுப் புலம் படர, ஓசனிக்கின்ற உறு வெயில் கடை நாள்- வையமும், சிவிகையும், மணிக் கால் அமளியும், உய்யானத்தின் உறு துணை மகிழ்ச்சியும், சாமரைக் கவரியும், தமனிய அடைப்பையும், கூர் நுனை வாளும், கோமகன் கொடுப்ப; பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கைப் பொன் தொடி மடந்தையர் புது மணம் புணர்ந்து; செம் பொன் வள்ளத்து, சிலதியர் ஏந்திய அம் தீம் தேறல் மாந்தினர் மயங்கி; பொறி வரி வண்டு இனம் புல்லுவழி அன்றியும் நறு மலர் மாலையின் வறிது இடம் கடிந்து-ஆங்கு: இலவு இதழ்ச் செவ் வாய் இள முத்து அரும்ப, புலவிக் காலத்துப் போற்றாது உரைத்த காவி அம் கண்ணார் கட்டுரை எட்டுக்கு நாவொடு நவிலா நகைபடு கிளவியும்; அம் செங்கழுநீர் அரும்பு அவிழ்த்தன்ன. செங் கயல், நெடுங் கண் செழுங் கடைப் பூசலும்; கொலை வில் புருவத்துக் கொழுங் கடை சுருள, திலகச் சிறு நுதல் அரும்பிய வியரும்; செவ்வி பார்க்கும் செழுங் குடிச் செல்வரொடு வையம் காவலர் மகிழ்தரு வீதியும்- |
உரை உரை உரை உரை |
|
"பதியிலாரின் இரு பெரு வீதிகள்" |
||
|
150 155 160 165 |
சுடுமண் ஏறா வடு நீங்கு
சிறப்பின் முடி அரசு ஒடுங்கும் கடி மனை வாழ்க்கை, வேத்தியல், பொதுவியல் என இரு திறத்து, மாத்திரை அறிந்து, மயங்கா மரபின் ஆடலும், வரியும், பாணியும், தூக்கும், கூடிய குயிலுவக் கருவியும் உணர்ந்து, நால் வகை மரபின் அவினயக் களத்தினும் ஏழ் வகை நிலத்தினும் எய்திய விரிக்கும் மலைப்பு-அரும் சிறப்பின் தலைக்கோல் அரிவையும்; வாரம் பாடும் தோரிய மடந்தையும்; தலைப் பாட்டுக் கூத்தியும்; இடைப் பாட்டுக் கூத்தியும்; நால் வேறு வகையின் நயத்தகு மரபின் எட்டுக் கடை நிறுத்த ஆயிரத்து எண் கழஞ்சு முட்டா வைகல் முறைமையின் வழாஅத் தாக்கு அணங்கு அனையார் நோக்கு வலைப்பட்டு, ஆங்கு, அரும் பெறல் அறிவும் பெரும்பிறிது ஆக, தவத்தோர் ஆயினும், தகை மலர் வண்டின் நகைப் பதம் பார்க்கும் இளையோர் ஆயினும், காம விருந்தின் மடவோர் ஆயினும், ஏம வைகல் இன் துயில் வதியும் பண்ணும் கிளையும் பழித்த தீம் சொல் எண்-எண் கலையோர் இரு பெரு வீதியும்- |
உரை உரை உரை உரை உரை உரை உரை |
|
"அங்காடி வீதி " |
||
|
170 175 |
வையமும், பாண்டிலும்,
மணித் தேர்க் கொடுஞ்சியும், மெய் புகு கவசமும், வீழ் மணித் தோட்டியும், அதள் புனை அரணமும், அரியாயோகமும், வளைதரு குழியமும், வால் வெண் கவரியும், ஏனப் படமும், கிடுகின் படமும், கானப் படமும், காழ் ஊன்று கடிகையும், செம்பின் செய்நவும், கஞ்சத் தொழிலவும் வம்பின் முடிநவும், மாலையின் புனைநவும், வேதினத் துப்பவும், கோடு கடை தொழிலவும், புகையவும், சாந்தவும், பூவின் புனைநவும், வகை தெரிவு-அறியா வளம் தலைமயங்கிய, அரசு விழை திருவின் அங்காடி வீதியும்- |
உரை |
|
"இரத்தினக் கடைத்தெரு" |
||
|
180
185 190 195 200 |
காகபாதமும், களங்கமும்,
விந்துவும், ஏகையும் நீங்கி, இயல்பின் குன்றா நூலவர் நொடிந்த நுழை நுண் கோடி நால் வகை வருணத்து நலம் கேழ் ஒளியவும்; ஏகையும் மாலையும் இருளொடு துறந்த பாசு ஆர் மேனிப் பசுங் கதிர் ஒளியவும்; பதுமமும், நீலமும், விந்தமும், படிதமும், விதி முறை பிழையா விளங்கிய சாதியும்; பூச உருவின் பொலம் தெளித் தனையவும்; தீது அறு கதிர் ஒளித் தெண் மட்டு உருவவும்; இருள் தெளித்தனையவும்; இரு வேறு உருவவும்; ஒருமைத் தோற்றத்து ஐ-வேறு வனப்பின் இலங்கு கதிர் விடூஉம் நலம் கெழு மணிகளும்; காற்றினும், மண்ணினும், கல்லினும், நீரினும், தோற்றிய குற்றம் துகள் அறத் துணிந்தவும்; சந்திர-குருவே, அங்காரகன், என வந்த நீர்மைய வட்டத் தொகுதியும்; கருப்பத் துளையவும், கல்லிடை முடங்கலும், திருக்கும், நீங்கிய செங் கொடி வல்லியும்; வகை தெரி மாக்கள் தொகைபெற்று ஓங்கிப் பகை தெறல் அறியாப் பயம் கெழு வீதியும்- |
உரை உரை உரை உரை உரை உரை உரை உரை உரை உரை |
|
"பொன் கடைத்தெரு" |
||
| சாதரூபம்,
கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம் என ஓங்கிய கொள்கையின் பொலம் தெரி மாக்கள் கலங்கு அஞர் ஒழித்து, ஆங்கு, இலங்கு கொடி எடுக்கும் நலம் கிளர் வீதியும்- |
உரை |
|
|
"அறுவை வீதி" |
||
|
205
|
நூலினும், மயிரினும்,
நுழை நூல் பட்டினும் பால் வகை தெரியாப் பல் நூறு அடுக்கத்து, நறு மடி செறிந்த அறுவை வீதியும்- |
உரை |
|
"கூல வீதி" |
||
|
210 |
நிறைக் கோல் துலாத்தர்,
பறைக் கண் பராரையர், அம்பண அளவையர், எங்கணும் திரிதர, காலம் அன்றியும், கருங் கறி மூடையொடு கூலம் குவித்த கூல விதியும்- |
உரை |
|
"பற்பல வீதிகளையும் கண்டு, கோவலன் புறஞ்சேரிக்கு மீளுதல்" |
||
|
215 |
பால் வேறு தெரிந்த நால்
வேறு தெருவும், அந்தியும், சதுக்கமும், ஆவண வீதியும், மன்றமும், கவலையும், மறுகும்-திரிந்து, விசும்பு அகடு திருகிய வெங் கதிர் நுழையாப் பசுங் கொடிப் படாகைப் பந்தர் நீழல், காவலன் பேர் ஊர் கண்டு, மகிழ்வு எய்தி, கோவலன் பெயர்ந்தனன், கொடி மதில் புறத்து-என். |
உரை |