இதுமுதல் சண்டமாரிகோயிலில் நிகழும் நிகழ்ச்சி
57. |
இனையன நினைவை யோரு மிளைஞரை விரைவிற் கொண்டு |
|
தனைர சருளும் பெற்றிச் சண்டனச் சண்ட மாரி |
|
முனைமுக வாயிற்
பீட முன்னருய்த் திட்டு நிற்பக |
|
கனைகழ லரச னையோ
கையில்வா ளுருவி னானே. |
(இ-ள்)
இளையன நினைவை ஒரும்-இத்தகைய தூய நினைவை ஆராயும், இளைஞரை- --, சண்டன்-சண்டகருமன், தனை அரசு அருளும் பெற்றி - தன்னை அரசன்
சம்மானிக்குந் தன்மையில், விரைவில் கொண்டு - விரைவாகக் கொண்டு சென்று, அச் சண்டமாரிவாயில் - அந்தச் சண்டமாரிகோயில்
வாயிலின், முனைமுகபீடம் முன்னர் - எதிரிலுள்ள கொலைக்களமான பலிபீடத்தின்முன்னே, உய்த்து இட்டு நிற்ப - (அவ்வி்ருவரையும்)
செலுத்தி நிற்கச்செய்து தான் விலகி நிற்ப, கனை கழல் அரசன் - ஒலிக்கின்ற வீரக்கழலணிந்த மாரிதத்தவரசன்,
கையில் வாள் உருவினான். - (அவ்விளைஞரைப் பலியிடவேண்டி உறையினின்றும்) வீரவாளினைக் கையில் உருவி ஓங்கினான்; ஐயோ-ஐயோ
என்னபாவம!் (எ-று.)
சண்டகருமன் இளைஞரைக் கொண்டு பலிபீடத்தின்
முன் இட்டு நிற்பப் பலியிடக் காத்திருந்த வேந்தன்வீரவாளினை உருவி ஓங்கினாள் என்க.
ஓர்தல் - உணர்தல் யசோ. 32. முதல் கூறியவற்றைக் தொகுத்து, ‘இனையன நினைவை ஓரும்
இளைஞர்‘ என்றார். முனை - எதிர், இனி, முனைமுகம் - போர்முனைபோலும் இடம் எனினுமாம். எண்ணிறந்தவுயிர் கொல்லப்படுதலின்,
ஐயோ-இரக்கக் குறிப்பு. (53)
|