- 264 -

 பாபம் செய்தவர்க்குப் புகலிடம்  நரகமல்லது வேறு இல்லை யென்றாரென்க.

 ‘உயிர்ப்பொருள் வடிவுகோறல் உயிர்க்கொலைபோலும்‘என்று மேலே கூறியிருப்பது (38) காண்க.  உவந்தனர், முற்றெச்சம்.  ஈங்கு உவத்தல் - (கொலைத்தொழிலில்)  ஆனந்தம்: ரௌத்ரத்யானத்தின் பிரிவாகிய ஹிம்ஸாநந்தம். யசோ.147. உரை காண்க.  (26)  

246.  மற்றவ னினைய கூற மனநனி கலங்கி வாடிச்
  செற்றமுஞ் சினமு நீக்கித் திருவறத் தெளிவு காதல்
  பற்றினன் வதங்கள் முன்னம்1 பகர்ந்தன வனைத்துங் கொண்டு
  பெற்றன னடிக ணுமமாற் பெரும்பய னென்று போந்தான்.

(இ-ள்.) அவன் இனைய கூற - அகம்பன முனிவர்இவற்றைக்கூற, மனம் நனிகலங்கி வாடி - (தளவரன்)  மனம்மிகக் கலங்கிச் சோர்ந்து, செற்றமும் சினமும் நீக்கி -(அறம் மேற்கொள்ளும் முறைப்படி) செற்றத்தையும், சினத்தையும் விலக்கி, திரு அறம் தெளிவு காதல் பற்றினன் - திருவறத்தின் உண்மையில் அன்புகொண்டு,  முன்னம்பகர்ந்தன - (அவரால்) முன் கூறப்பட்டனவாகிய, வதங்கள்அனைத்தும் - விரதங்களையெல்லாம்,  கொண்டு   - (அம்முனிவரிடமே) கைக்கொண்டு,  அடிகள் - அடிகளே !  நும்மால் - தங்களால், பெரும் பயன்பெற்றனன் - மிக்க நன்மையைஅடைந்தேன், என்று போந்தான் - என்று விடைபெற்றுமீண்டான்.  (எ-று.)

தளவரன், நற்காட்சியுடன் விரதங்களையும் ஏற்றுச் சென்றானென்க.

தன் இழிதொழிலின் பொல்லாங்கைக் கருதி,   மனங்கலங்கி உடல்மெலிவடைந்தன னாதலின்,  ‘மனநனி கலங்கிவாடி‘  என்றார்.  பிறவி முதலியவற்றால் தாழ்ந்த ஜாதியினரென்று கூறப்படும் எத்தகையோரும் இறைவனருளியநற்காட்சி முதலியன மேற்கொள்ளலா மாதலின்,  ‘செற்றமும்... கொண்டு‘ என்றார்.  ‘பறையன் மகனெனினுங்

 

1 முன்னர்.