என்றார் (மேரு, 77) வாமன முனிவரும். ‘நாயும் தேவனாம்
நற்காட்சியால்’ என்ற அருங்கலச் செப்பு ஈண்டு அறிதற்பாலது. அம்பு வீ்ழ்ந்த
ஓசை கோழிகட்கு நடுக்கஞ் செய்தது. அதனால் இறந்து பட்டன என்க. இனி, ‘கொன்றது‘என்று
சொல்ல அஞ்சி, ‘நடுக்கியது’ என்றார் எனினுமாம்.
251. |
விரைசெறி பொழிலி னுள்ளால1
வேனிலின்2 விளைந்த வெல் |
|
அரைசனு3
மமர்ந்து போகி4 யகநகர்க் கோயி
லெய்தி (லாம் |
|
முரைசொலி கழுமப் புக்கு மொய்ம்மலர்க்
குழலி னாரோ |
|
டுரைசெய லரிய வண்ண முவகையின்
மூழ்கி னானே. |
(இ-ள்.)
விரை செறி பொழிலின் உள்ளால் - நறுமணம் மிக்க சோலையினுள், வேனிலின் விளைந்த
எல்லாம் - வேனிற் பருவத்தில் உண்டாய இன்ப மனைத்தையும், அரசனும் --, அமர்ந்து
போகி -(தேவியருடன்) நுகர்ந்து சென்று, அகநகர் கோயில் எய்தி - அகநகரிலுள்ள தன்
அரண்மனையை யடைந்து, முரசு ஒலி கழும - (மற்றை வாத்தியங்களின் ஒலியோடு) முரசின்
ஒலி முழங்க, புக்கு - சென்று, மொய்மலர் குழலினாரோடு - மலர் மாலையணிந்த நெருங்கியகூந்தலையுடைய
தேவியரோடு, உரைசெயல் அரிய வண்ணம் - உரைத்தற்கரிய தன்மையில், உவகையில் மூழ்கினான்
-உவகைக்கடலுள் ஆழ்ந்து களித்தான். (எ-று.)
அரசன், தேவியருடன் கோயிலெய்திக் களித்தானென்க.
அரைசன், அரசன், முரசு அரசச் சின்னங்களுளொன்று, ‘கழுமென்
கிளவி மயக்கஞ் செய்யும்’ என்றலின்,‘மற்றை வாத்தியங்களின் ஒலியோடு’ என்பது வருவிக்கப்பட்டது.(32)
252. |
இன்னண மரசச் செல்வத் திசோமதி செல்லு நாளுள் |
|
பொன்னிய லணிகொள் புட்பா வலியெனும்
பொங்கு கொங் |
|
இன்னிய லிரட்டையாகு மிளையரை
யீன்று1 சின்னாள் [கை |
|
பின்னுமோர் சிறுவன் றன்னைப்
பெற்றனள் பேதை தானே. |
1 னுள்ளான்.
2 வேனலில்.
3 அரசனும்
4 யேகி.
1
செல்நாள்(252)
|
|