822 காஞ்சிப் புராணம்

இக் கயிலாயநாதர் கோயில் கலைகளுக்கிடனாக அதிவிசித்திரச் சிற்பக் கோயிலாக, அசரீரிகேட்ட இராசசிம்மனால் கி. பி. 700ல் அமைக்கப்பட்டது. இதன் இயல்புகள் சொல்லுக்கடங்காச் சிறப்பின. காஞ்சியை அடைந்தோர் யாவரும் வந்து வணங்கிய கோயில் எனினும் ஆம்; கயிலாயநாதர் திருக்கோயிலைக் காணக் காஞ்சிக்கு வருகின்றனர். எனினும் அமையும். இத்தலம், ‘கச்சிப் பலதளியும் ஏகம்பத்தும் கயிலாதநாதனையே காணலாமே’ என்னும் சிறப்பொடும் புத்தேரி தெருவிற்கு மேற்கில் உள்ளது.

வீரராகவேசம்: இராமன், தன் மனைவியாகிய சீதையை இராவணன் கவர்ந்து சென்றமையால் வருந்தி அம்மனைவியைப் பெறுமாறும் இராவணனை வெல்லுமாறும் உபாயமும் உபதேசமும் புரிந்த அகத்தியர் சொல்வழி ‘வீரராகவேசன்’ என்னும் பெயரால் சிவலிங்கம் நிறுவிப் போற்றினன்.

பிரானார், வெளிநின்று வீரம் வேண்டினை ஆகலின் வீரராகவன் என்னும் பெயரொடும் விளங்குக’ எனவும், பாசுபதப்படையை வழங்கித் தேவர் பிறரைக்கொண்டு அவரவர் படைகளை வழங்குவித்து இலக்குவனொடும் சுக்கிரீவன் முதலாம் படைத் தலைவனொடும் இலங்கை புகுந்து இராவணனை அவன் சுற்றத்தோடும் அழித்துச் சிதையை மீட்டுக் கொண்டுபோய் அயோத்தியை அடைந்து அரசு செய்க’ எனவும் அருள் புரிந்தனர்.

அகத்தியர் உணர்த்திய தத்துவங்களின் ஐயங்களை இராமனுக்குப் போக்கிய சிவபிரானார், இங்கு வணங்கினோர் பகைவரை வென்று வாழ்ந்து திருவருளை எய்துவர் என அருளி மறைந்தனர்.

இத்தலம் புத்தேரி தெருவிற்குத் தெற்கிலுள்ள வயலில் அமைந்துள்ளது.

கற்கீசம்: ஊழி முடிவில் கொடியவர்களை அழித்தற் பொருட்டுத் திருமால் கற்கி (குதிரை) ஆக இருந்து வீரராக வேசத்திற்குத் தெற்கில் மண்ணி தீர்த்தக் கரையில் வணங்கி வரம்பெற்ற தலம் ஆகும். வீரராகவேசத்திற்கும் ஐயனார் கோயிலுக்கும் அடுத்துள்ள இச்சிவலிங்கத்தை வணங்கினோர் போக மோட்சங்களை பெறுவார்.

வாணேசம்: வாணன் தவத்தினுக்கு எளிவந்து சிவபிரானார் திருநடனம் செய்தனர். திருநந்திதேவரொடு வாணனும் குடமுழா முழக்கினன். பெருமானார். ஆயிரங் கைகளை அவ்வசுரனுக்கு அளித்து மேலும், அவன் விரும்பிய நெருப்புவடிவமான கோட்டையையும் மூவுலகையும் ஆளும் வல்லமையையும், அழியாத இயல்பையும் பிறவற்றையும் வழங்கினர்.

யாவரையும் அடிப்படுத்து அவ்வசுரன் ஆளும் நாளில் கயிலைக்குச் சென்று பெருமானை வணங்க ‘நினக்கு வேண்டும் வரம் யாதென’ வினவிய கயிலைநாயகர்பால் நாளும் திருக்காட்சி தர அம்மையொடும்