8


சிவமயம்

சிறப்புப்பாயிரம்

சென்னை - திரு. ரா. சண்முகசுந்தரஞ் செட்டியார் அவர்கள் இயற்றியது

மணிநீர் வரைப்பின் மன்னிய மக்கள்
மணிமுடி யிந்திரன் மாலயன் முதலாந்
தேவரு மறியாத் திருவுரு வுடையோன்
ஏவருந் தெளிய வெழிலுருக் கொள்வோன்
கறையணி கண்டமுங் கவின்பெறு மேனியும்
நிறையணி பொடியும் நேர்மையாக் கொண்டோன்
அவன்றனைச் சிவனென வரனென வன்பொடு
பவமறு புண்ணியர் பாடும் பான்மையர்
"கேடு மாக்கமுங் கெட்ட திருவினார்
ஒடுஞ் செம்பொனு மொக்கவே நோக்குவார்
கூடு மன்பினிற் கும்பிடலே யன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கி"யே
பல்வகை யடியார் பரந்த புகழ்தனைச்
சில்வகைச் செய்யுளிற் செவ்விதி னுரைப்பது
நன்னா டெனப்படுந் தொண்டை நாட்டினிற்
குன்றைப் பதிவாழ் கோதிலாச் செம்மல்
சேவுகைத் தேறிடுஞ் செல்வனை நினைவோன்
சேக்கிழா னென்னுஞ் சிறந்த புகழோன்
அவநெறி புகாம லநபாய வேந்தலைச்
சிவநெறி படாச் செந்நெறிப் புகுத்திய
பெருமை சான்ற பெரிய புராணமென்
றரும்பொருள் திரட்டி யடியவர்க் கருளுந்
தன்னேரில்லாப் பொற்கிழி தனக்குத்
தொன்னூற் றுறைபோஞ் செந்நாப் புலவர்
விரிவுரை குறிப்புரை வகுத்தனர் பலரே;
விரிவுரை தம்முள் விளங்கிய பொருளோடு
பின்னோர் வேண்டும் விகற்ப மனைத்தும்
தொன்முறை வழாது தொகுத்தும் விரித்தும்
ஆய்ந்துற நோக்கி யழகுற வமைத்து
ஏய்ந்துள பொருளெலா மெளிதிற் றெளியத்
தருகென வகுத்தனன் தாவில்சீர்ப் பயனைத்
தருவென வளிக்குந் தன்மை வளமிகு
கொண்மூ வுறங்குங் கோவை தன்னுள்
வண்டமிழ் வளர்த்த வேளாண் டலைவன்
கந்த னீன்ற காதற் றனயன்;
பந்த நீக்கு பனுவல்கள் பன்முறை
திருச்சிற் றம்பலத் திருத்தகு குறவன்