10

துதி

திருத்தொண்டர்கள் - சேக்கிழார் சுவாமிகள்

 
உலகெ லாந்தனி புரந்திடு கின்ற
     வுண்மை யங்கது நிற்கமற் றாங்கே
உம்பர் நாட்டினை ஒருதனி புரந்திவ்
     வுலகங் காவல்செய் தருளிடு மண்ணல்
நலஞ்செய் தன்றிரு வாக்கினால் நவின்று
     நானி லத்தினோரின்பொடு முய்ய
நல்கு மாத்தொண்டத் தொகையினர் பாத
     நளினம் வாழ்த்திநல் வாழ்வுறு மதனோடு
அலகி லாஅவர் திறமது விரித்திங்
     கருள்செய் சேக்கிழார் பதமலர் பணிவாம்
அன்னை யாயுல கியாவையு மருளி
     அப்ப னுக்கடி மைத்திறஞ் சாரப்
புலமை தந்தருள் சத்தியா யெங்கும்
      பூர ணக்கரு ணையினொடு மமரும்
புக்கொ ளிப்பெருங் கருணைநா யகியைப்
     புகலு மித்தமி ழினிதினோங் கிடவே.      (8)
வித்தியாகுரு மரபு - தீட்சாகுரு மரபு

சீராருந் துறைசைவளர்1சிவஞான குரவன்முதற்
      றேசின் மன்னிச்
சிறந்ததனித் திருச்சிற்றம் பலவன்வரை வருவித்தை
      செப்பு மேன்மை
ஏராருங் குரவன்மார் பதமலர்கள் போற்றிநல
      மெய்த வாங்கே
எழிலாரும் பொழிலார்கச் சியின்2 ஞானப் பிரகாச
      னிணைத்தாள் போற்றிப்
பாராருந் திருத்தில்லை வாழ்3முத்துக் கற்பகனார்
      பதங்கள் போற்றிப்
பன்னுபுக ழவிநாசி யப்பனொரு பங்குடையாள்
     பகருஞ் சீர்த்தி
ஏராரும் வித்தைக்கு முத்திக்கு முதல்வியா
     மிறைவி பாதத்
தியம்புமெளி யேனவிலும் புன்சொல்லு மினிதுதழைத்
      திடுக வென்றே.                    (9)


குறிப்பு :- உரையாசிரியர் இயற்றிய திருப்புக்கொளியூர் அவிநாசிப்
பெருங் கருணையம்மை பிள்ளைத்தமிழ் என்ற நூலில் நுதியென்னுப்
பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட பாடல்கள்.

1. உரையாசிரியரின் வித்தியா குரு பரம்பரை; திருவாவடுதுறை மாதவச்
சிவஞானமுனிவர்; கச்சியப்ப முனிவர்; கந்தப்பையர் : சரவணப்
பெருமாளையர்; சந்திரசேகரம்பிள்ளை; கந்தசாமி முதலியார்; திருச்சிற்றம்பலம்
பிள்ளை.

2. காஞ்சிபுரம் - தொண்டைமண்டலாதீனம் ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச
தேசிகர் - உரையாசிரியருக்குச் சமய விசேட தீக்கைகள் அருளிய குரு.

3. சிதம்பரம் உலகமூர்த்தி தேசிகர் மடம் ஸ்ரீ முத்துக்கற்பகக்
குருக்களையா - உரையாசிரியருக்கு நிர்வாண தீக்கை அருளியவர்.