69

துன்றியசெந் நெலினடிசில், கன்ன,னறுங் கனிக,
     டூயவறு சுவைக்கறி, நெய், தயிர், திரண்ட பா,றே,
னன்றுதிருப் பண்ணியந்,தண் ணீரமுத, மடைக்காய்,
     நரபதியே வலினமைச்சர் நாடோறு நடத்த,
82
 
நலமலியுந் திருத்தில்லை மன்றினினின் றாடு
     நடராசற் கன்றுமுதன் மகபூசை நடத்தி,
யலகில்புகழ்த் தில்லைவா ழந்தணர்க்கும் வெவ்வே
     றமுதுபடி கறியமுது முதலான வெல்லா
நலமலிசெங் கோல்வளவன் றப்பாமே நாளு
     நடத்திவர, வரனடியார் நிறைந்து, பதஞ்சலியும்
புலிமுனியுந் தவஞ்செய்த பெரும்பற்றப் புலியூர்
     பூலோக சிவலோக மெனப்பொலிந்து தோன்ற,
83
 
மருவுதிரு முறைசேர்ப்பா, ரெழுதுவா,ரிருந்து
     வாசிப்பார், பொருளுரைப்பார், கேட்டிருப்பார், மகிழ்ந்து
சிரமசைத்துக் கொண்டாடிக் குதுகுலிப்பார், சிரிப்பார்,
     1தேனிப்பார், குன்றைமுனி சேக்கிழார் செய்த
வரியதவத் தினைநினைப்பா, “ரம்பலவர் முன்னா
     ளடியெடுத்துக் கொடுக்கவிவர் பாடின“ரென் றுரைப்பார்,
“பெரியபுரா ணங்கேட்ட வளவர்பிரான் செவிக்குப்
     பிடிக்குமோ வினிச்சிந்தா மணிப்புரட்“டென் றுரைப்பார்.
84
 
இத்தகைய சிறப்புடனே திருத்தொண்டர் புராண
     மிருந்தன்பர் பாராட்ட நடந்தெதிரா மாண்டு
சித்திரையா திரைநாளின் முடிய,வது கண்டு
     திருத்தொண்ட ரரவெனும்பே ரொலியெழுந்து பொங்கக்,
கத்துதிரைக் கடலொலியை விழுங்கிமுழங் கோரேழ்
     கடலொலியைக் கீழ்ப்படுத்திப் பிரமாண்ட வெளியைப்
பொத்தியிமை யவர்செவியை நிறைத்துயரப் பொங்கிப்
     பொன்னலகுக் கப்பாலும் புகப்பொலிந்த தன்றே.
85
 
திருத்தொண்டர் புராணமெழு தியமுறையை மறையோர்
     சிவமூல மந்திரத்தா லருச்சனைசெய் திறைஞ்சி,
யிருக்குமுதன் மறைநான்கி னின்றுமுத லாக
     விதுவுமொரு தமிழ்வேத மைந்தாவ தென்று
கருத்திருத்தி, யமுதடைக்காய் நறுந்தூப தீபங்
     2கவரிகுடை கண்ணாடி யாலத்தி நீறு
பரித்தளவு செயக்கண்டு, வளவர்பிரான் முறையைப்
     பசும்பட்டி னாற்சூழந்து பொற்கலத்தி லிருத்தி,
86
 
செறிமதயா னைச்சிரத்திற் பொற்கலத்தோ டெடுத்துத்,
     திருமுறையை யிருத்தியபின், சேவையர்கா வலரை
முறைமைபெற வேற்றி, யர சனுங்கூட வேறி,
     முறைமையினா லிணைக்கவரி துணைக்கரத்தால் வீச,
 

     1 தேனித்தல் - தேன் முதலியவற்றை உண்டார் போலக் களிப்பால்
நாவைச் சுவைத்தல். சிரிப்பார் களிப்பார் தேனிப்பார் - திருவாசகம்.

     2 கண்ணாடி முதலியன பூசைக்குரிய சோடசோபசாரமெனப்படும்.