71

1 மூவ ரோதுதிரு முறைக ளேழு, திரு வாத வூரர்முறை
                                  யொன்; றிசைப்
 
  பாவ ரைந்தமுறை யொன்று; மூலர்முறை யொன்று; பாசுரம
                                    தாதியாக்
கோவை செய்தமுறை யொன்று; சேவையர் குலாதி
                            நீதிமுறை யொன்றுடன்
பாவை பாகர் திருவருள்சி றந்தமுறை பன்னி ரண்டென
                                     வகுத்தபின்,
96

2 தோடு செய்ததிரு நெறிய செந்தமிழொ டொக்கு“                         மென்றுரை தொடர்ந்துசெப்
 
  பேடு செய்து, நட ராசர் சந்நிதியி லேற்றி னார்க;ளிது
                                       பாலிசூழ்
நாடு செய்ததவ!; நீடு குன்றைவள நகரி செய்ததவ!;
                                      நிகரிலாப்
பீடு செய்தபகி ரதிகு லத்திலகர் சேக்கிழார் செய்த
                                    பெருந்தவம்!
97

  

1. மூவர் ஓது திருமுறைகள் - ஏழாவன - ஆளுடையபிள்ளையார்
தேவாரங்கள் முதல் மூன்று திருமுறைகளாகவும், திருநாவுக்கரசர் பெருமான்
தேவாரங்கள் நான்காவது, ஐந்தாவது, ஆறாவது திருமுறைகளாகவும்,
சுந்தரமூர்த்திகளது தேவாரங்கள் ஏழாவது திருமுறையாகவும் வகுக்கப்பெற்று
உள்ளவையாம். வாதவூரர் முறை ஒன்று என்பது திருவாசகமுந்
திருக்கோவையுமாகிய எட்டாவது திருமுறையாம். இசைப்பா வரைந்த முறை
ஒன்று என்பது திருமாளிகைத் தேவர் முதற் சேதிராயரீறாக ஒன்பதின்மர்
பெருமக்கள் அருளிய திருவிசைப்பா, திருப்பல்லாண்டு என்பவையாம். இவை
திருவிசைப்பா என்ற பெயரால் ஒன்பதாவது திருமுறையாக வகுக்கப்பட்டன.
இவற்றுள் அடங்கிய திருப்பதிகங்கள் திருவிசைப்பா இருபத்தெட்டும்
திருப்பல்லாண்டு ஒன்றும் ஆக இருபத்தொன்பதாம். மூலர் முறை ஒன்று
என்பது திருமூலநாயனார் திருவாவடுதுறையில் அரசின்கீழ்ச் சிவ
யோகத்திருந்து ஆண்டுக்கொரு மந்திரமாக அருளிய மூவாயிரம்
திருமந்திரங்களடங்கிய பத்தாவது திருமுறையாம். பாசுரமதாதியாக்
கோவைசெய்த முறை ஒன்று என்பது, திருவாலவாயுடையார் அருளிய
திருமுகப்பாசுர முதலாக நம்பியாண்டார் நம்பிகள் அருளிய
திருநாவுக்கரசுதேவர் திருவேகாதச மாலையீறாக நாற்பது பிரபந்தங்களைக்
கோவை செய்த பதினோராந் திருமுறையாம். இவற்றை அருளியவர்கள்
திருவாலவாயுடையார் முதல் நம்பியாண்டார் நம்பிகள் வரைப் பன்னிருவர்
என்பர். இதனையும் ஏனை முன்னைத் திருமுறைகளையும், இராச ராச தேவர்
நம்பியாண்டார்நம்பிகளை வேண்ட, அவர் கோவை செய்த வரலாறு
திருமுறைகண்ட புராணத்துட் (23-29) காண்க. முன் வகுத்த
அப்பதினொன்றுடன் சேர்த்துப் புராணத்தைப் பனிரண்டாந்திருமுறையாக
வகுத்தவர் அநபாயசோழ தேவர் என்க. திருநெறிய தமிழ் - தேவாரங்கள்.

 2. தோடு செய்த திருநெறிய செந்தமிழொ டொக்குமென்று உரை
தொடர்ந்து சேப்பேடு செய்து - என்றது இப்புராணமும், “தோடுடைய“
எனத் தொடங்கினவையாய் முன்னாள் நம்பியாண்டார் நம்பிகளது
அருட்டுணை கொண்டு வகுத்த திருமுறைகளோடு ஒப்பாகும் என்று
சொல்லி, அக் கருத்தினாலே தொடர்ந்து, செப்பேடு வரைந்து சாசனம்
செய்து - என்றதாம். இந்தச் செப்பேடானது இக்கருத்தொன்றினையே
வெளியிடப்பெற்ற அரசரது கட்டளையாக அமைத்தனரென்றும்; அற்றன்றிப்,
புராணமுழுமையுமே செப்பேட்டில் வரைந்து சேமஞ் செய்தனர் என்றும்
இருவகையும் கொள்கின்றனர். எவ்வகையேயாயினும் இதுபற்றிய செப்பேட்டுச்
சாசனமொன்று அரசராணையால் நடராசர் கருவூலத்துள்ளே சேமிக்கப்பட்ட
தென்பது தில்லைவாழந்தணர்களிலொருவராகிய உமாபதியா ராணையால் ஒரு
தலையாய்த் துணியப்படும். அது கிடைப்பின் சைவத்துக்குப் பேரூதியமாம்.