2.
பஞ்சின் மெல்லடிப் பாவைய ருள்ளமும், வஞ்ச மாக்கடம்
வல்வினையும், அரன் அஞ்செழுத்துமுணரா அறிவிலோர், நெஞ்சுமென்ன
இருண்டது நீண்டவான் - 305.
11. தொகையுவமம்
:- பொதுத் தன்மை மறைந்து நிற்க வருவது. மயிலியலின் இன்றொண்டைச் செங்கனிவா யிளங்கொடி
- 293.
12. பலவிரவிய
உவமம் :- "விரவியும் வரூஉ மரபின வென்ப" என்ற
தொல்காப்பிய விதிப்படி உவமஞ் செய்யும்வழி மேற்காட்டியவாறு
ஒன்றேயன்றி இரண்டும் மூன்றும் விரவி வருதலும் மரபாம். (அ) ஏதுவுவமமும் சமுச்சய
உவமையும் சிலேடையும் விரவிய
கலவையணி.
"ஐயர் வீற்றிருக்குந் தன்மையினாலும், அளப்பரும்
பெருமையினாலும், மெய்யொளி தழைக்குந் தூய்மையினாலும்"
அநபாயன் திருமனம் போல ஓங்குவது திருக்கயிலாயமலை - 22. (ஆ) மெய்யும் தொழிலும்
பற்றிய உவமம். 1. கைதை, துன்றுநீறுபுனை தொணடர்களென்னத் தூயநீறுபுனை
மேனியவாகிச் சென்று சென்று முரல்கின்றன- 242. 2. விற்புரை நுதலின் வேற்கண் - 285. 3. எரிதளிர்த் தென்ன நீண்ட மின்னொளிர்சடை
- 369. 4. எரிதுள்ளி னாலென வெகுண்டான் - 527. (இ) மெய்யும் உருவும்
தொழிலும் பற்றிய உவமம்.
எரியினிடைத் தோய்ந்த செவ்வண்ணக் கமலம்போல் முகம்புலர்ந்து - 124. (ஈ) தொழிலும் பயனும்
பற்றி வந்த உவமம். பாசப் பழிமுதல் பறிப்பார் போலக் குழிநிரம்பாத
புன்செய்க்
குறும்பயிர் தடவிப் பறித்தார் - 460. (உ) உவமமும் சிலேடையும்
கலந்த கலவை யணி. கங்கையாம் பொன்னியாங் கன்னி நீத்தம் - 55.
lll உருவகம் :- "உவமையும் பொருளும் வேற்றுமை
ஒழிவித்,
தொன்றென மாட்டினஃ துருவகமாகும்" என்க. 1. மறைச் சுரும்பு - 242. 2. இன்னமுதத்தினை - 303.
உவம உருவகம் : கயிலை உலகமாகிய கொடியின் மேற்பூத்த வெண்மலர்
போல்வது - 13. lv தற்குறிப்பேற்றம்
:- 1. கடலைக் கடைந்து அமுதத்தினைக்
காட்டுவன் என்பது போலச் சூரியன் கடல்புக - 303. 2. சீறடிமே னூபுரங்க ளறிந்தனபோற் சிறிதளவே யொலிப்ப
- 316. 3. திருமணக் கோலங் காணக் - காமுறு மனத்தான்
போலக் கதிரவ
னுதயஞ் செய்தான் - 159. 4. வன்றொண்டர் வருந்தினால், இறுமருங்குலார்க்கியார்
பிழைப்பாரென்று, கங்குனங்கைமுன் கொண்ட புன்முறுவல் என்ன -
வெண்ணிலாமுகிழ்த்தது - 306. இன்னும் இவை பற்றி எனது "சேக்கிழார்"
என்ற நூலிற் (121-ம்
பக்கம் முதல் 142-ம் பக்கம் வரை) கூறியுள்ளவையும் பார்க்க. அணிகள்
எவையேயாயினும் சேக்கிழாரது கைப்பட்ட போது அவை
சிவப்பொலிவுற்றுப் பத்திச் சுவையே காட்டுவன.
|