அணுக்கத் தொண்டர்.
தேவருமசுரரும் அமிர்தம் கடையுங்கால் எழுந்ததும்
திருமால் முதலிய தேவரும் எதிர் நிற்க வியலாததும் ஆகிய கொடிய
ஆலகால விடத்தைத் தன்கையிலேந்திச் சென்று சிவபெருமானிடம்
கொடுத்தவர்.
இசைக் கலைப் பெயர்கள்
(221 - 222) - இத்தளம் - முதல் -
மும்மை - கிழமை - இசை - பாணி.
இசைஞானியார்
(149) - சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தாயார்.
சடையனார் மனைவி. அறுபத்துமூன்று நாயன்மார்களில் பெண்
அடியவர்களுள் ஒருவர். கமலாபுரத்தில் (திருவாரூர்) சிவகோதம
கோத்திரத்தில் ஞானசிவாசாரியார் குடும்பத்தில் அவதரித்தவர் என்ப.
இந்திரன்
(137) - புரந்தரன் - (19 - 126)
- தேவர்களைக் காப்பவன்)
- இந்திரதெய்வதம் (62) - சதமகன் (249) - தேவர்களுக்கு அரசன், மருத
நிலத்தெய்வம். வயல்களில் நாற்று நடுவதற்குமுன் தொழப்படும்
பேறுடையோன். மழைக்காக உலகத்தவரால் செய்யப்படும் விழா வேற்பவன்,
நூறு அசுவமேத யாகம் செய்து இந்திர பட்டத்தை எய்தியவன். இந்திரன் -
மேலான ஐசுவரிய முடையோன்.
இயமன்
- மறலி (113) - காலன் (338) - அட்டதிக்குப் பாலகர்களில்
தென்றிசைக்குரிய தேவன். காலன் - காலம் அளந்து உரிய காலத்தில்
வருபவன். தருமன் - தருமராசன் எனவும் பலவாறு பெயர் பெற்றவன். இயற்பகை நாயனார்
(403 - 405 - 409 - 424 - 430 ) - அறுபான்
மும்மைத் தனியடியாருள் ஒருவர். பெருங்குடி வணிகர். அடியவர்கள் ஏது
வேண்டினும் இல்லையென்னாது கொடுப்பவர். தன் மனைவியையும் ஒரு
சிவனடியற்யாருக் கீந்த செகரிய செயலினைச் செய்த தீரர். சரிதச் சுருக்கங்
காண்க (பக்கம் - 541). இயற்றமிழ்
(51) - இயலிசை நாடகம் என்னும் முத்தமிழின் ஒன்று.
தமிழிலக்கியங்களிற் செய்யுளும் உரைநடையுமாக இயல்வது (பக்கம் - 63
- பார்க்க.)
இலக்குமி - மாமலராள்
(86) - வரமலர் மங்கை - (279) - திரு -
(364) - மகா விட்டுணுவின் தேவியார். திருவாரூரில் சிவபெருமானை
நோக்கித் தவங்கிடந்து மங்கிலியங் காத்துக் கொண்டவர். இளையான்குடி (440)
- இளசை (439) - இது மாற நாயனார்
அவதரித்த திருத்தலம், இதனாலே அவருக்கு இளையான் குடிமாற நாயனார்
என்ற திருநாமமும் வந்தது. தலவிசேடங் காண்க (பக்கம் - 547, 568.) இளையான்குடி மாற நாயனார்
(440) - அறுபான்மும்மைத்
தனியடியாருளொருவர். சரிதச் சுருக்கம் காண்க (பக் - 573.)
உபமன்னிய முனிவர்
((23 - 24 - 25 - 29 - 47) சிறந்த முனிவர்.
வியாக்கிரபாத முனிவரது புதல்வர். இவர் பாலனாய்ப் பாலுக் கழுதபோழ்து
சிவபெருமான் தந்த பாற்கடலுண்டு வளர்ந்தவர். சிவன்றன்னையே தொழும்
பான்மையர். கண்ணனுக்குச் சிவதீக்கை செய்தவர். ஆரூரர்
வெள்ளையானையிலமர்ந்து மாலொடயனும் தேவர் முனிவரும் சூழக்
கைலைக்குச் செல்லுங்கால் பேரொளியாகக் கண்டு தரிசித்துச்
சுந்தரமூர்த்திகளது முன் பின் வரலாறுகளையும், அடியார் சரிதங்களையும்
கயிலையில் முனிவர்களுக்கு அருளியவர். இவர் அருளிய வரலாற்றின்
படியால் இத்திருத்தொண்டர் புராண மியற்றப்பெற்றதாம்.
திருமலைச் சருக்கம் (47) பார்க்க. உமாதேவியார்
- ஆளுடைய நாயகி (33 - 56) - மெய்த்தவக் கொடி
(42) - எம்பிராட்டி (44) - ஏழுலகீன்றவள் (44) - தனிநாயகி (241) -
அறம்பயந்தாள் (257) - பார்ப்பதி (271) - மலைவல்லி (281) - மாமலையாள்
(338) - உம்பர் நாயகி (407) - இமக்குலக்கொடி (450) - சிவபெருமானாரது
சத்தி. அவர் திருவுருவில் பாதியுருக் கொண்டவர். பற்பல வன்பர்களிடத்துக்
குழவியாய்த்
|