முடித்தருள் வழிநின், றிந்த நற்பெருங் கிரியையன் புடனே யியற்ற வல்லவ
ரெம்மருங் கிருப்பார்" - (திருவாதவூரர் புராணம்) என்றதிற் காண்க.
குபேரன்
- நிதிமன்னவன் (246)
நிதிக்கிழவன் (465) -
சிவபெருமான்றோழர். அட்டதிக்குப் பாலகரிலொருவர்.
குறட் பூதம்
(16) - சிவகணங்களாகிய பூதங்கள். "குண்டைக்
குறட்பூதங்குழும" என்பது ஆளுடைய பிள்ளையார் திருவாக்கு. இவை
என்றும் சிவபெருமானைச் சூழ்ந்துகொண்டு ஆடியும் பாடியும் திளைப்பன.
அளவில்லா வலிமை யுடையன. சிவபெருமான் இவைகட்கெல்லாம்
நாதரானமையின் "பூதநாதன்" எனப் பெறுவர்.
கெடிலம்
(230 - 235) - தென்றிசையிற் கங்கை (235)
- நடுகாட்டில்
ஓடும் ஒரு நதி. ஜீவநதி என்ப. தென்றிசையிற் கங்கையெனப்
போற்றப்படுவது. இதன் வடகரையிலே திருவதிகை வீரட்டானம் உள்ளது.
கொள்ளிடம்
(256) - ஒரு நதி. ஆங்கிலத்தில் Coleroon என்பர்.
சோழநாட்டில் பாய்வது. திருப்பராய்த்துறைக்குச் சமீபத்தில் காவிரியினின்றும்
பிரிவது. இதற்குக் கலங் கொள்ளிடம் என்ற
பழம் பேர் கல்வெட்டுக்களில்
காணப்பெறுகின்றது. சோழ மன்னர்கள் கடலிலிருந்து தமது நாட்டிற்குள்
மரக் கலங்கள் வருவதற்காகக் கலம் கொள்ளத் தக்க அகலமும் ஆழமும்
பெற அமைத்தனர் என்ப.
கோலக்கா (260) இது சோழ நாட்டுத்தலம். சீகாழிக்கு
மேல்பால்
அரை நாழியளவிலுள்ளது. திருஞான சம்பந்தப் பெருந்தகையார் ஓசையுடைய
பொற்றாளம் பெற்றுப் பதிகம் பாடிய திருத்தலம். தலவிசேடம் காண்க.
(பக் - 311).
கோவலூர் வீரட்டம்
(467 - 472) - இது நடுநாட்டுத்
தலங்களிலொன்று. அந்தகாசுர சங்காரம் நிகழ்ந்தது. வீரட்டங்களிலொன்று.
மெய்ப்பொருள் நாயனார் ஆட்சி செலுத்திய நகரம் திருக்கு + ஓவல்
+ ஊர் = அறியாமையை ஒழித்து (உயிர்களுக்கு அருள்புரியும்) தலம் என்று
தலமான்மியம் கூறும். தலவிசேடங் காண்க (பக்-609)
சடங்கவி சிவாசாரியார்
(153 - 154) - சிவமறையவர். இவரது ஊர்
புத்தூர். இரவது புதல்வியைச் சுந்தரமூர்த்திகட்குத் திருமணஞ்
செய்துகொடுக்க இசைந்து பின்னர்ப் பெருமானால் தடுத்தாட் கொள்ளப்
பெற்றமையால் மணம் தவிரவே, வன்றொண்டர் திருவடிகளைத் துதித்துக்
கதியெய்தினார். தடுத்தாட்கொண்ட புராணத்துட் சரிதங் காண்க.
சடையனார்
(149-153) - அறுபான்மும்மைத் தனியடியாரு ளொருவர்.
சிவமறையவர். ஆரூரருக்குத் தந்தை. இசைஞானிப் பிராட்டியாருக்குக்
கணவர்.
சரசுவதி - வெண்கொடி
(243) - பிரமனது தேவி. வெள்ளை
நிறமும், வெண்கலையும் கொண்டு வெண்டாமரையில் வீற்றிருப்பவள்.
சகல கலாவல்லி.
சரியை
- சைவ நாற்பாதங்களுள் ஒன்று. தாசமார்க்கம், "ஆவ
லாலெமக் காமலர் மரங்க ளாக்க லம்மலர் பறித்தலம் மலராற், றாவி
லாவகை தார்பல சமைத்த றணப்பி லெம்புகழ் சாற்றலன் புடனா, மேவு
மாலய மலகிடன் மெழுகல் விளக்க னல்விளக் கிடுதலெம் மடியார்க்,
கேவ லானவை செய்தலிச் சரியை யியற்ற வல்லவர்க் கெம்முல
களிப்போம்" - திருவாதவூரடிகள் புராணம்.
சாய்க்காடு
(429) - சோழநாட்டுத் தலங்களுளொன்று.
காவிரிப்பூம்பட்டினத்திற் கருகிலுள்ளது. தலவிசேடங் காண்க (பக்-543).
சிதம்பரம்
- காவிரிநதியின் வடகரையிலுள்ள தலங்களுள்
முதன்மைபெற்றது. "கோயில்" எனப் பெறுவது. புலிக்கால் முனிவர் -
வியாக்கிரபாதர் - பூசித்தமையின் புலியூர் எனப் பெற்றது. தில்லையென்னும்
மரமடர்ந்த காடாயிருந்தமையின் தில்லைவனம் எனவும் பெறும். சிவகங்கை,
பரமானந்த கூபம், புலிமடு, வியாக்கிர
|