திருவாரூர்
 

பசு ஆராய்ச்சிமணியைக் கொம்பினால் 
அசைத்து அடித்தல்
 

 
தன்னுயிர்க் கன்று வீயத் தளர்ந்தவாத் தரியா தாகி
முன்னெருப் புயிர்த்து விம்மி முகத்தினிற்
                              கண்ணீர்வார
மன்னுயிர் காக்குஞ் செங்கோன் மனுவின் பொற்
                            கோயில் வாயிற்
பொன்னணி மணியைச் சென்று
                  கோட்டினற்புடைத்த தன்றே

வரிசை 112-ம் பாட்டு-பக்கம்-133,
 

 மனுச்சோழர் தேரை மகன்மேற்செல ஊர்தல்
 

 
ஒருமைந்தன் றன்குலத்துக் குள்ளானென்
                               பதுமுணரான்
றருமந்தன் வழிச்செல்கை கடனென்று தன்மைந்தன்
மருமந்தன் றேராழி யுறவூர்ந்தான் மனுவேந்தன்
அருமந்த வரசாட்சி யரிதோமற் றெளிதோதான்
 

வரிசை 129-ம் பாட்டு-பக்கம்-152,