xiv
தெய்வீகச் சான்றுகள் சிலவற்றின் குறிப்புக்கள்

1. திருக்காளத்தி :- சுவாமியின் மூலலிங்கத் திருமேனியில் இடது
கண்ணும் அதன் கீழ் இரத்தத் துளிகள் சிந்திய தோற்றமும் இன்றும்
காணலாம்.

2. பொன்முகலியாறு :- சித்தூர் சந்திரகிரி முதலிய
இடங்களிலிருந்து வரும் இந்த ஆறு வேனிற் காலத்தில் மேலும் கீழும்
வறண்டுபோனாலும் திருக்காளத்தி அண்மையில் காளத்திக்குத் தெற்கே
மூன்று நாழிகையும் வடக்கே மூன்று நாழிகையும் அளவில் தண்ணீர்
கண்டு வற்றாமல் நீர் ஓடிக்கொண்டிருப்பது இன்றும் காணத்தக்கது.

3. பழைய மண்டபங்களில் கண்ணப்ப நாயனாரின் தந்தை, தாய்
இவர்களின் உருவங்கள் காண உள்ளன.

இக்குறிப்புக்கள் மேற்படி கோயில் திருப்பணி செய்த
பெரியார் மெ. இராமநாதன் செட்டியார் அவர்களின் தவப்
புதல்வர்களில் ஒருவரான திரு. மெ. அரு. நா. கண்ணப்ப
செட்டியாரவர்களால் தரப்பட்டன.