xxi

திருவொற்றியூர் - 1116. தொண்டை நாட்டில் தேவாரம்பெற்ற
தலங்களுள் ஒன்று. (பக்கம் 1438)

துந்துபி 663. தேவ வாத்தியங்கள். ஒசை ஐந்து 750.

தொண்டைநன்னாடு - 1078. திருக்குறிப்புத்தொண்ட நாயனாரது நாடு.
1078 முதல் 5 பாட்டுக்களையும் ஆண்டு உரைத்தவையும் பார்க்க.

நந்தனார் - 1051. திருநாளைப்போவார் நாயனாரின் பிள்ளைத்
திருநாமம்.

நந்திமால்வரை - 1098. தொண்டை நாட்டிலுள்ள மலைத்
தொடர்களுள் ஒன்று. இதனின்றும் பாலாறு உற்பத்தியாகிறது.

நாளைப்போவார் - 1040. திருநாளைப்போவார் நாயனார். நந்தனார்
என வழங்கப்படுவர். அறுபான் மும்மைநாயன்மார்களுள் ஒருவர்.

நிதிக்கோன் - 1178. குபேரன்.

பசுபதியார் - 1030 - 1033. உருத்திரபசுபதி நாயனார். அறுபான்
மும்மை நாயன்மார்களுள் ஒருவர்.

பட்டவர்த்தனம் - 561, 601; 776. அரசர் பட்டத்து யானையின் பெயர்.

பதும மாநாகம் - 1132. மாநாகங்கள் எட்டனுள் ஒன்று. (பக்கம் 1456)

பவித்திரை - 1216. விசாரசருமனாரின் (சண்டீசநாயனாரின்) தாய்.

புகலூர் - 1017. திருப்புகலூர். (பக்கம் - 1317). தலவிசேடம் (பக்கம்
1334) பார்க்க. முருகநாயனார் அவதரித்துப் பணிசெய்து பேறடைந்த தலம்.

பாசூர் - 1109. திருப்பாசூர். தொண்டை நாட்டில் தேவாரப்
பாடல்பெற்ற தலங்களுள் ஒன்று. (பக்கம் 1431)

பாண்டிநாடு - 968. மூர்த்திநாயனார் அவதரித்த நாடு; தமிழ்நாடு
எனப்படும். பாண்டியமரபு மன்னர்களால் அரசுபுரியப்பெற்றமையால்
இப்பெயர் பெற்றது. பாண்டியர் தமிழ்நாட்டு முடியுடை மூவேந்தர்களுள்
ஒருவர். தமிழ்நாடு 979.

பார்வை - 652, 720.

பாலி - 1099. தொண்டைநாட்டின் சிறந்த ஆறு. (பக்கம் 1421).

பூமகள் - 1172. இலக்குமிதேவி.

பிள்ளையார் - 862, 1027. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்.
காழித்தலைவராம் பிள்ளை 862. தெள்ளுமறைகள் முதலான ஞானம்
செம்பொன் வள்ளத்தில் அள்ளி யகில மீன்றளித்த வம்மை
முலைப்பாலுடனுண்ட பிள்ளையார் 1027. அழகார் புகலிப் பிள்ளையார்
1029. சரிதமும் பிறவும் அவர் புராணத்துட்காண்க.

புகழ்ச்சோழர் - 561. அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவர்.
அத்திருக்கூட்டத்தினுள் முடிமன்னர் அறுவருள் ஒருவர். (புராண வரலாறு
36.) எறிபத்த நாயனாரது அன்பின்நிலை வெளிப்படக்காரணராயிருந்தவர்.
இவரது சரித நிகழ்ச்சி எறிபத்தநாயனார் புராணத்திலும் இவர்தம்
புராணத்தினும் காண்க. (பக்கம் 716.)

பொன்மலை - 552. இமயமலை என்றும் கூறுப.

பொன்னிநாடு - 831, 903. சோழநாடு. பொன்னி என்னும் காவேரி
பாய்வது.

போகபீடம் - 1160. திருக்காமக்கோட்டம்.

மங்கலதீர்த்தம் - 1155. காஞ்சிபுரத்தின் புண்ணிய தீர்த்தங்களுள்
ஒன்று. செவ்வாய்க்கிழமையில் இதனுள் மூழ்குதல் சிறப்புத் தருவதென்ப.

மங்கலம் - 932. ஆனாயநாயனார் அவதரித்த ஊர். தலவிசேடம் -
பக்கம் - 1239.

மண்ணி - 1206; 1211. சோழநாட்டின் ஆறுகளுள் ஒன்று.
கொள்ளிடத்தினின்றும் பிரிந்து ஓடுவது. (பக்கம் 1545).