இனி முதற்கடவுளாவார் சர்வசங்கார காரணனாகிய சிவபெருமானே. சிருட்டி முதலிய ஐந்தொழிலிலும் சர்வசங்காரத்தைச் செய்பவனே ஏனைய உபசாரக் கடவுளரின் மேலான முழுமுதல்; மூவர் கோனாய் நின்ற முதல்வன் அந்தம் - ஆதி - என்மனார் புலவர் என்பது தமிழ் ஆகமஞான பாதமாகிய சிவஞானபோதம். பாரிலுள்ள நூலெல்லாம் படித்து அறியும் பயானகச் சிவஞானசித்தியிலே ஒருவிருத்தப்பாதியை நல்லாசிரியர்பால் முறையே கேட்டுச் சிந்தித்து நிட்டை கூடிச் சிவபெருமானின் திருவருளாகிய திருவடிகளில் காறலை போலும், தாடலை போலும் அடங்கி, ஏகனாகி இறைபணி நின்று, மும்மலங்களின் தாக் கற்றுச் சிவமாம் தன்மையைக் பெறுதலே ஆனமாக்களுக்கு உரிமை. சிவபெருமான் திருவடியாகிய மரக்கலத்தைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடப்பார். அதனைச் சேராதவர் கடக்கமாட்டார். திருவடிப்பேறாகிய அருள்முத்தி பெற்றாரே, சிவமொன்றுமே கண்டுகொண்டு உலகத்தைப் பாராது, உலாவுகின்ற சீவராய்ச் சீவன் முத்திப் பெருவாழ்வினராவர். பிராரத்த உடல் உள்ள அளவும் நின்றியங்கி மேலைப் பிறவிக்கிடமாய மலங்கள் தேய்ந்துவிட்டமையால் காயமழிந்த பின், பரமுத்தராவர். அவர்களின் நிலையைப்பற்றி உண்மை விளக்கமாவது, கற்றா மனம்போல் கசிந்துகசிந் தேயுருகி உற்றாசான், லிங்கம், உயர்வேடம் - பற்றாக முத்தித் தலைவர் மழுமலத்தை மோசிக்கும் பத்திகளில் நின்றிடுவர் பார். இந்தனத்தி லங்கி யெறியுறுநீர் தேனிரதங் கந்தமலர்ப் போதுவான் காலொளிகண் - சந்ததமும் மத்துவித மாவதுபோ லான்மாவு மீசனுமாய் முத்தியிலே நிற்கு முறை. அத்தகைய சிவப்பேறு பெற்ற பெரியார்களே, பெரிய புராண வரலாற்று அடியார்கள். அவர்களுள் சைவசமய குரவர்களாவார் நால்வரில் ஒருவரே திருநாவுக்கரசு நாயனார். சிவபெருமானால்"அம்மையே" என்று புனிதவதியாகிய காரைக்கால் அம்மையார் அழைக்கப்பட்டதுபோலச், சிவகுமாரராகிய திருஞான சம்பந்தரால் "அப்பரே" என்று போற்றப்பட்ட பெரியார்; திலகவதி யாராகிய தமக்கையாரால் சிவதீக்ஷா அருள் விபூதிப் பிரசாதம் வழங்கப்பெற்றுப் புறச்சமயத் தீங்கும் சூலைநோயும் நீங்கப்பெற்ற பெருந்தவத்தோர். திருத்தொண்டர் புராணம் என்பதும் அருள் நிறைவாகிய மூலநிதியும், ஞான பொக்கிசமுமாம். அதன் ஆழ்ந்த நுட்பத் தெய்வ உண்மை அனுபவங்களை "சிவன் அவன்" சிந்தையுள்ளே நின்ற அதனால் "அதன் அருளே கண்ணாகக் காட்டக் கண்டாலொழிய" ஏனைய பசுபாச தற்போத ஏகதேச மாயாகருவி ஞானங் கொண்டு அறியலாகாது. அவ்வாறு அறிய இயலாத பேதைமாக்கள் மேலெழுந்தவாரியாகப் பெற்றவர் பெற்ற பயன் நுதர்ந்திடும் பித்தராய் மனம்போன போக் கெல்லாம் வரையறையின்றிப் பலப்பட பிதற்றித் திரிவது என்ன பாவம்! ஆ! ஆ! கலியின் கொடுமையோ? தீவினையாளரின் தவக்குறையோ? அப்பேதைமைக் |