10சிறப்புப் பாயிரம்

 

இங்கு உதராண முகத்தால் எடுத்துக் காட்டுதல் தகுதியாமென்று எழுதலாயிற்று.

உரையின் பொது நலங்கள்

1. இதனுட் காணப்படும் தலப்படங்கள், அவ்வத் தலங்களையும் அங்கங்கும் காணப்படும் சரிதம்பற்றிய அடையாளங்களையும் நேரே கண்டு பயன் பட்டாற் போன்ற நலத்தைத் தருவன. தலயாத்திரைப் படங்கள் இரண்டும் யாத்திரை செய்வோர்க்குத் தக்க வழிகாட்டியாக உதவுவன.

2. தலவிசேடக் குறிப்புக்கள் அவ்வத் தலங்களிற் சென்று தரிசிப்போர்க்கு உசாத்துணையாய் வழிபாட்டு நலம்புரிவன.

3. சரிதச் சுருக்கமும், கற்பனை என்ற பகுதியும் சரித முழுவதையும் அதன்கட் பயின்று உட்கொள்ளத்தக்க உண்மைகளையும் சுருக்கியும் விளக்கியும் இக்காலநிலைக்கேற்றபடி அறியக் காட்டுகின்றன.

4. சரித ஆராய்ச்சிக் குறிப்புக்கள் ஆராய்ச்சியாளர்க்கு ஊன்றுகோல் போல வுதவுவனவன்றியும் நாயனாரது சரிதப் பகுதிகள் பலவற்றினும் உண்மை காணும் சான்றாகத் துணை செய்கின்றன.

5. தலத் தேவாரங்களை அங்கங்கும் தந்து பதிகக் குறிப்புப் பாட்டுக் குறிப்பும் தந்துள்ளது இவ்வுரையின் தனிச்சிறப்பாகும். தேவாரங்கள் புராணத்துக்குஅகச் சான்றாவன. தேவாரங்களால் புராணமும், புராணத்தினால் தேவாரங்களும் ஒன்றினா லொன்று விளங்க உள்ள பொருட்பொருத்த நிலையானது கற்போர்க்குப் பெருஞ் சாதனமாகும்.

6. தேவாரக் குறிப்பு என்ற பகுதிகள் அவ்வப் பதிகங்களின் உட்குறிப்புக்களையும் பொதுக் கருத்துக்களையும் தருவன. தேவாரப் பாட்டுக் குறிப்பு என்ற பகுதிகளில் பதிகப் பாட்டுக்களை வரிசைப்பட என் குறித்து அவ்வப்பாட்டுக்களில் அறியவேண்டிய பல பொருள்களையும் நூன்முறையும் மரபும் பிறழாது எடுத்துக் காட்டுகின்றன. நாயனாரது தேவாரத்தையும் இதிற்காணும் பதிகக் குறிப்புப் பாட்டுக் குறிப்புகளுடன் தனிப் புத்தகமாக அடக்க விலைக்கு வெளியிட்டால் அது ஒரு பேருபகாரமாகும்.

உரையின் சிறப்பு நலங்கள்

இனி இவ்வுரையிற் சிறப்பாகக் காணும் சில நலன்களைப்பற்றி இங்கு எழுப்படுகிறது.

1. ‘குலம், குடி, மரபு முதலிய பகுப்புக்கள் இல்லை; இவை மக்களைப் பிளவுபடுத்துவன; இவை ஒழிய அல்லது ஒழிக்கத் தக்கன எனறிவ்வாறெல்லாம் கொண்டு பேசுவோன் "மேதக்க நிலைவேளாண் குலத்தின்கண் வரும்பெருமைக் குறுக்கையர் தங்குபடி விளங்கும்" (1280) என்றும், "குணம்பேசிக் குலம்பேசி" என்றும் வரும் பாட்டுக்களின் கீழ் உரைத்தவற்றைக் கண்டு உண்மை தெரியக் கடவன்.

2. சமூகச் சீர்திருத்தங்கள் என்ற பேரால் மறுமணம் (விதவா விவாகம்) முதலியவற்றைப் பேசுவோன் "எந்தையு மெம்மனையு மவர்க் கெனைக்கொடுக்க விசைந்தார்கள், அந்தமுறை யாலவர்க்கே யுரியதுநா னாதலினால் இந்தவுயி