பக்-283. முற்றுணை - முன் - காலமுன - இடமுன் - ஆகக்கொண்டு எப்பொழுதும் எவ்விடத்தும் முன்னே தணையாய் நிற்பவன் - எனலுமாம். பக்-366. "ஒடிள வெண்பிறை யானும்" - ஓடு - தலையோடு எனவும் கொள்ளலாம். "ஒடு முடிக்கிலர்போலும்" - சம்பந்தர் தேவாரம். பக்-369. ஆடரவக் கிண்கிணிக்கால் - இது தியாகரைக் குறிக்கின்றது - "மணி ஆடரவக் கிண்கிணிப் பாதத்தர் ஆரூர்த் தியாகர்" - திருவாரூர்க் கோவை 193. பக்-394. "முறையாலே" - எனவருதலால் 'முத்து விதானத்தைப் பக்தர்கள் ஏந்தியும், "மணிப்பெற் கவரியை"ப் பாவையர் ஏந்தியும் சூழ்ந்தனர் - எனலாம். பக்-430. உங்கள் கருத்தில் வாட்டமுறீர் - பசி நோய் தொடராமைக்குக் காரணம் இவர் நெஞ்சினுள் சிவஅமுது ஊறுதல் - " "குகனே குருபரனே யென நெஞ்சிற்புகழ* * * சிவ அமுதூறுக வுந்திப் - பசியாறி - திருப்புகழ் 593. பக்- 442. அம்பர் - திருவின்னம்பர் - என்றதற்குக் காரணம் புலப்படவில்லை; அம்பர் என்றே தலம் இருக்கின்தே (அம்பர்ப் பெருந் திருக்கோயில்) பக்-564. பொருநாகத் திண்சிலை - பொருநாகம் (வாசுகியை நாணாகக் கொண்ட) திண்சிலை - எனலுமாம். பக்-567. வேதகீதம் - வேதகீதம் பாடுபவர் எனலுமாம். "பாடினாய் மறையோடுபல் கீதமும்" - சம்பந்தர். பக்-611. பால் தடம்புனல் - பால் - பக்கம் (பக்கத்திலிருந்த தடம்) எனலுமாம். பக்-619. 1643 செய்யுள் (1) மால்விடை - பெரிய - பெருமை பொருந்திய விடை எனலுமாம். பக் -621. 1643 - செய்யுள் (2) விடையாடி எனவும் பிரிக்கலாம் - விடையின் மேல் ஆடி வருபவர் - "எருதுகந் தேறிப் பாடியும் ஆடியும் - சம்பந்தர். பக் - 634. நீல வண்ணத்தர் - தேவி (நீலி) பாகத்தராதலின் - எனலுமாம். பக்-640. வெங்கண் பிணி - "எங்கள் பிணி தவிர்த்து" - என்றும் பாடம்; ஒரு பதிப்பில் "எழுவா யிறுவா யிலாதன வெங்கள் பிணி தவிர்த்து" - என்றிருக்கின்றது. பக்-648. "நெய்ப்பூசு மொண்புழுக்க னேரிழையார் கொண்டாடும் தைப்பூசும்" என்ற தேவாரம் நினைவுக்கு வருகின்றது. பக் - 656. வெம்ப - கோபிக்க; "காலன் வெம்பி வந்திப்பொழு தென்னையென் செய்யலாம்" (கந்தரலங் -69) பக்-660 - 706. கோத்திட்டை - தனி வைப்புத் தலமென்று கேள்வி; "வைப்புத்தல விளக்கம்" பார்க்க. பக்-668. குவளைமலர் பிளவு செய்து பிணைத்து - "பைந்தாட் குவளைத்தூவிதழ் கிள்ளி" (முருகு) நினைவுக்கு வருகின்றது. பக்-680. எண்பெருக உரைத்தருள - எண் - மதிப்பு எனவும் கொள்ளலாம். |