22திருப்புகழ் விரிவுரை

 

அவற்றில் ஏறியாடுகின்றன எனவுமாம். எனவே கூடும் மாடமும் இரண்டும் மலை போன்றன. அவை இரண்டிலும் மயிலும் முகிலும் ஆடுதலால் அவை இரண்டும் மாறாடுகின்றனவுமாம். சேய்மையில் நின்று காண்பேர் மாடங்களை நெற்கூடுகள் எனவும், நெற்கூடுகளை மாடங்கள் எனவும் மாறிச் சொல்ல மயிற் குலமும் முகிற்குலமும் ஆடும் எனலுமமையும்.

1276. நாவுக்கரசும் ஆலாலசுந்தரரும் பிறந்தருளியது எதுவும் தீநெறிமாறியது பயனுமாகக் கொள்க. ஒரிடத்தே உதித்த ஞாயிறும் மதியும் வானத்து இருள் முழுதும் நீக்குவதுபோல, திருமுனைப்பாடி நாட்டிலே உதித்த இருவரும் பேருலகில் மறந்தரு. தீநெறி மாற்றினர் என்க. வாய்மை நெறி அறம் தரும் என்பதை நாவுக்கரசுக்கும் ஆலாலசுந்தரர்க்கும் தனித்னி விசேடணமாகக் கூட்டுக.

1277. திருவாமூர் - நாயனாருடைய திருநாமம் போன்றே அவரது ஊரின் பெயரும் வாய்மை திகழும் பெயராயிற்று.

1278. அலர்நீடும் - எனக்கொள்ளின் அணியூசல் எனப் பிரிக்க; மணியூசல் எனப் பிரிக்கின் மணிநீடும் என்று மோனை கெடாது கொள்க. கலம் நீடும் மனை - மரக்கலம்போல் நீடிய மனை என்க. மனைக்கு அணிகலமாகிய மக்களயுடைய வீடுகள் எனலுமாம்.

1280.குடி - இப்பாடலில் இருமுறை வரும் இச்சொல்லில் முதலில் வருவது குடிமக்களையும் மற்றது ஒர குருலத்தின் உட்பிரிவையும் குறிக்கும். உலகிலுள்ள நாடுகளிற் சிறந்தது திருமுனைப்பாடி நாடு (1276); அந்நாட்டுப பதிகளிற் சிறந்தது திருவாமூர் (1280); அவ்வூர்க்குடிகளின் குலங்களிற் சிறந்தது வேளாளர்குலம்; அக்குலத்திற் சிறந்தது குறுகயர் குடி (1281); அக்குடியிற் சிறந்தவர் புகழனார் (1282 - 1283); அவர் குமாரர் மருணீக்கியார் என்று மேலும் மேலும் அழகுறக் கூறிச் செல்லும் காவிய நயம் காண்க.

1281.விருந்தளிக்கும் மேன்மை - விருந்தோம்பலிற் சிறந்தவர் வேளாளராதலின் அதை விதந்து கூறினார்.

1283.பின்மலரும் மருள்நீக்கியார் - முன்னேயும் மருள் இல்லாதவராய், முனிவராய் இருந்து, அவதரித்த பின் அடைந்த சமணச் சார்பாகிய மருளைப் பின் நீக்கியவர்.

1285.பொருள் நீத்தங் கொளவீசி - கற்பிக்கும் ஆசிரியருக்குப் பொருள் நிறைய வழங்கி. "உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும்...கற்றல் நன்று" (புறம் - 183). கற்பிக்கப்படுவோருள் "பொருள் நனி கொடுப்போன்" ஒருவனாகக் கூறப்பட்டது காண்க. (நன்னூல் சூ. 37). புலன்கொளுவ...கலை - கதிரவன் எல்லா முகைகளையும் பொதுவாகக் காய்ந்து மலர்வித்தாலும் அவற்றுள் இயல்பாய் அமைந்துள்ள வெவ்வேறு மணங்கள் வெளிப்படும். அதுபோலவே கல்வி எல்லாருடைய மனங்களையும் மலர்வித்தாலும் மேலைப் பிறவிப் பயிற்சிவயத்தால் அம்மனங்களில் அடங்கியுள்ள அறிவு பலதிறத்தவாய் வெளிப்படும்.

1286. மைந்தர் பிறந்ததால் மகிழ்ச்சியும், வளர்கின்றதால் களி மகிழ்ச்சியும்; கலை பயின்றதால் களி மகிழ்ச்சி தலை சிறந்ததும் ஆம். வளரும் பிறை வடிவும் ஒளியும் ஒருங்கே வளர; பெறுவது போல உடலும் அறிவும் ஒருங்கே வளரலாயினர்.