24திருப்புகழ் விரிவுரை

 

1338. பொறியில் சமணீசர் - என்றும் பாடம். பொறி - திரு, ஊழ்,

1346.கொலையும் பொய்ம்மையும் இலம் என்று - கொலைக்கும் பொய்ம்மைக்கும் இ(ல்)லமானவர்கள் என்று

1347.விருத்தியும் - உம்மை எச்சத்தொடு சிறப்புப் பொருளாது. மன்னவன் சைவனாவதிலும் விருத்தியைத் தவிர்ப்பான் என்பதுதான் மிகுந்தகவலை.

1349.முன்னம் - அரசன் பிறரால் உண்மையை அறிந்து கொள்வதன் முன்பு.

1351. அடிகள்மார் எல்லாரும் ஆகுலமாய் மிக அழிந்து - இந்நான்கு சொற்களும் அரசன் அவார்களுக்கு விரைவில் காட்சியளிக்க வேண்டும் என்ற குறிப்பினவை. நுடங்குதல் - நடுங்குதல், சமணர்களது துயரமும், மன்னவனுக்குத் தோன்றும் சினத்தையும் பயனையும் எண்ணிநடுங்கிற்று என்க. கடிது அணைவான் கடுந் தொழில் மேற்கொள்பவன் என்றதொனி.

1352. நடை - ஒழுக்கம். ஆடுதல் - நாடகத்தால் நடித்தல். தொழில் - இயல்பு. நாடகத்தில் நடிப்பதுபோலப் பொய்யாக ஒழுகுதல் என்க. நடையாடுந்தொழில் - கோட்சொல்லும் இயல்பினராதலின் அரசனிடம் அடிக்கடி நடக்கும் தொழிலினர் எனலுமாம். தாம் எண்ணியவாறு - நிகழ்ந்தவாறல்லாமல் தாம் பொய் சொல்ல எண்ணியவாறு என்க. சடையானுக்கு ஆளாய் - மழித்த தலையினை யுடைய சமணர் தழைத்த சடையினராய சிவபெருமானொடு தமக்குள்ள தலையான விரோதம் குறித்தவாறு என்க.

1353. அழித்து ஒழித்தல் - அழித்தே விடுதல். ஒழி என்ற துணை வினை துணை உணர்த்தும். வெகுண்டு கனன்றான் - வெகுளல் - கேட்டவுடன் வரும் வரும் சினமும். கனலுதல் - சிந்தித்துச் சீறுதலுமாம்.

1354. அலைபுரிவாய் - தண்டனை செய்வாய் என்று என்ன தண்டனை என்பதைக் குறிக்காது கூறினர். சமயத்தை அழித்ததனால் அதை மட்டுமன்றி உன் ஆணையையும் நீ வகுத்த வழியையும் அழித்தார் என்று கொலை தண்டனை விதித்தற்கு வேண்டிய அளவு அரசனின் சினத்தைத் தூண்டிவிட்டு அத்தண்டனையை வாயாற்கூறாது வஞ்சகமாக குறிப்பிட்டது காண்க. பாவி வாய் - வாயின் இழிவு குறித்ததுமாம்.

பக்கம் - 121. பதிகப்பாட்டுக் குறிப்பு : (6) சிறந்து - அன்புடையராகி. கடவம் அலோம் - கடப்பாடு உடையேம் அல்லோம்; (9) பணிகேட்கும் பணியோம் - ஏவலுக்குப் பணியும் ஏவலாளர்; (10) நாணற்றார் - உடையில்லாத சமணர். ஆவா - இரக்கக்குறிப்பு இடைச்சொல்.

1360. அறந்துறந்து தமக்குறுதி அறியார் - "அறத்தினூஉங் காக்கமுமில்லை", "தன்னைத்தான் காதலனாயின்" (குறள்).

பக்கம். 130 - பதிகப்பாட்டுக் குறிப்பு: (3) தொழும்பர் - கீழோர்: இகழ்ச்சி குறித்தது. "மண்ணதனிற் பிறந்தெய்த்து மீண்டு மண்ணேயாகி வீணாவர்" (திருவாசகம்); (5) ஆக்கைக்கே இரைதேடி, (கதிதேடிக் கொள்ளாமல்) அலமந்து தாம் காக்கைக்கே இரையாகி வீணாகக்கழிவர்; (7) சூழ்த்து - வலம்வந்து; அம்மா - இரக்கக் குறிப்பு. (8) சூழ்ந்த கொண்டு - வளைந்து கொண்டு. (9) பொக்கம் உள்ளீடில்லாமை; பொய்.

1365. உவந்து இருந்தார் தம்மைக் கண்டு ஈனம் தங்கியது இலது ஆம்! என்ன? அதிசயம்! என்றார் - நீற்றறையைத் திறந்து பார்த்த சமணர்கள் தங்களுக்.