26குறிப்புக்கள்

 

கொண்டு போற்றுகின்றனர். வருணனும் அவ்வாறு சிரத்தில், தாங்கினான். உம்மை எச்ச உம்மையாம். நுரை, சங்கு, மீன், இப்பிபோன்ற இழி பொருள்களைத் தாங்கும் சிரத்தாலும் கரத்தாலும் நாயனாரைத் தாங்கும் பேறுபெற்றான் எனக்கொண்டு வருணனும் என்பதில் உள்ள உம்மை இழிவு சிறப்பும்மை யாகவும் கொள்க.

பக்கம் - 175. பதிகப்பாட்டுக் குறிப்பு : (6) கர்ப்பத்துள்ளிருக்கும் சிசுவும் மகாதேவனைக் காண முயல்கின்றது. "யோனியை விட்டு வெளி வருவேனாயிற் பரமேசுவரனும், பர்க்கனும், பசுபதியும், ருத்திரனும், சகற்குருவுமாகிய மகாதேவனைச் சரணமடைவேன்" என்றுசீவான்மா நிச்சயித்ததாகக் கர்ப்போ நிஷதம் கூறுவது காண்க. (பரிபூரணானந்தபோதம் பக்கம் - 110. பாம்பன் சுவாமிகள்); (7) அமரர் இரக்கப் பரவையுள் நஞ்சு எண்ணாது உண்டாய் - என இயைக்க. எண்ணாது - பொருட்படுத்தாமல்; நஞ்சினையுண்டதும் திரிபுரம் எரித்ததும் சிவனது பரத்துவத்துக்குச் சான்று ஆகும்; (8) "முன்பு பெறும் பேற்றுக் கெல்லை முடிவில்லை, பின்பு பெறும் பேறு முண்டோ? பெறுவேனேல், என்பு பெறாத் இழி பிறவி யெய்திடினும் அன்பு பெறுகை அரும்பேறெனக் கென்றான்" (கம்ப - இரணி - 169) என்றதையும் ஈண்டு ஒப்பிடுக.

பக்கம் - 187. பதிகப்பாட்டுக் குறிப்பு : (1) பொறி அரவினான் - உருத்திரன்.

பக்கம் - 188. பதிகப்பாட்டுக் குறிப்பு : (7) குண்டரக்கன் - செய்யவேண்டியதைச் செய்யாத சோம்பர். (அமரம், விசேஷ்ய. 18)

பக்கம் - 191. பதிகப்பாட்டுக் குறிப்பு : (1) முளைக்கதிர் - மூங்கில் முளைபோன்ற கதிர்களையுடைய பிறை எனலுமாம். (2) மடக்கணி என்லுமாம்; (8) பேதுற - ஐயுற - ஏங்க - நகும் - முதல் மூன்றும் மயக்கவணியாயும் நான்காவது தற்குறிப்பணியாயும் கொள்ளலாம்.

பக்கம் - 194. பதிகப்பாட்டுக் குறிப்பு : (4) தீவினைச் சுற்றம் - தீ வினையாகிய சுற்றம்; (7) அழித்திலேன் - விற்பனை செய்திலேன். சரக்கு விற்பனையாதலை அழிதல் என்பர் வணிகர்.

பக்கம் - 196. VIII. பதிகப்பாட்டுக் குறிப்பு : (1) உணங்கல் - வற்றல் முதலிய காயப்போடும் பொருள்கள். இளமையில் வீண் காலம் போக்கி முதுமையில் தவம் முயல்வோர் முற்பகலில் சோம்பியிருந்து வெயில் குறைந்து வரும் பிற்பகலில் உணங்கல் அட்டுவார் போல்வர்.

பக்கம் - 196. IX. பதிகப்பாட்டுக் குறிப்பு : (1) அலைக்கு வாள் உவமை. (2) தவளை ஒலிக்குப் பறை உவமை.

பக்கம் - 197. X. பதிகப்பாட்டுக் குறிப்பு : (7) ஏமம் - யாமம் என்பதன் திரிபு.

பக்கம் - 198. XII. பதிகப்பாட்டுக் குறிப்பு : (3) வைதெழுவார் - வைவார். எழு - துணைவினை.

பக்கம் - 198. - XIII. பதிகப்பாட்டுக் குறிப்பு : (1) காப்பு - வாழுமூர்; படை வீடு எனலுமாம்.

பக்கம் - 202 - 203 - (1) மாமரத்து ஆகிய - பெரிய பகை கொண்ட. மாற்று என்பது எதுகை நோக்கித்திரிந்தது; (2) அந்தியான் - அந்தியில் ஜபிக்கும் மந்திரப் பொருளானவன் எனலுமாம். (3) காமாத்தம் - காமார்த்தம் இன்பமும் பொருளுமானவன். (4) வஞ்ச ஆறுகள் வற்றின; (6) பத்தி வெள்ளம் பரந்தது காண்மினே, நயம் காண்க.