34குறிப்புக்கள்

 

பக்கம் - 515. (1) எண்ணோடு.....தன்னையும் - இறைவனே எல்லாக் கலைகளுமாவான். "கலைகடம் பொருளுமறிவுமாய் (திருவிசைப்பா).

பக்கம் - 516. பெரியவன் என்பது இத்தலத்தின் இறைவருக்குச் சிறப்புப்பெயர்போலும். "பெரியவர்...திரிசிரகுன்றில் முதனாளில் தெரியவிருந்த பெரியவர் தந்த சிறியவ அண்டர் பெருமானே" (அருணகிரிநாதர்.) - (3) நரிச்சு இராது நடக்கும் - வெட்கி இருத்தலும் செய்யாது போய்விடும் எனலுமாம். நரை - வெண்மை. நரித்தல் - வெளுத்தல். "நரிப்பாய் நாயேன் இருப்பேனோ" (திருவாசகம்).

பக்கம் - 517. (1) மூத்தவன் - பெருமையுடையவன். "மூத்த திருப்பதிகம்" என்பது காண்க. இறுவரை - மலையின் கொடுமுடி. (2) ஐயான் - பெருமையான். நொய்யன் - சிறுமையன் - "நொய்யரிசி" என்பது காண்க. வெறித்த - மருண்ட. - (5) அங்கம் -
எலும்பு.

பக்கம் - 518. (1) காலம் கரப்பர் - காலத்தைத் தன்னுள் அடக்கினவர்; கால காலர்; காலாதீதர், அடைந்தவர்...வல்லார் - தம்மை அடைந்தாரது வினையை ஒழிப்பர். (4) மோழைமை - கூர்மையின்ன்மை. "ஏழையைக் கண்டால் மோழையும் பாயும்" என்பது காண்க. (7) பெறுப்பு அராவு - மலையைக் குழித்து. (11) பொருக்கு - விரைந்து.

பக்கம் - 525. (3) தொழுது செல்பவர் - வணங்கி வாணாள் நடத்துபவர். (7) வரிப்பை அரவு - வரியையும் படத்தையும் உடைய அரவு.

1577.தொண்டர்.....அங்கணரசு - "நந்தம்மைக் கோதாட்டி....சேவன்" (திருவெம்பாவை). "தங்கு....சாதித்தார்"-"எங்குமிலாததோ ரின்ப நம்பாலாதா" (திருவெம்பாவை). தங்கு பிறப்பு - பிறவியில் தங்குதல்.

பக்கம் - 543. (1) வட்டனை - "வர்த்தந" என்பதின் தற்பவம். வட்டனை மதி - கோணற்பிறை.

பக்கம் - 545. (5) நெடுந்தூவி - பெரிய வால்; (9) ஆகம்பத்து அரவு அணை யான் - அசைகின்ற (பாம்பணையான்) என்றலுமாம்.

பக்கம் - 546. (6) தருவினை மருவு கங்கை - கற்பக தருச்சூழலிற் பாயும் கங்கை. ஆகாய கங்கை. நல்கும் - அருளும்.

பக்கம் - 548. (3) ஆவம் அருளிச் செய்தாய் - அம்புறாத் தூணி கொடுத்தாய்.

பக்கம் - 548. lll. (10) ஓலக்கச்சூளைகள் - உருத்திர கணிகையர்.

பக்கம் - 548 lV. (1) கண்டுங்கண்டும் - பிரத்தியட்சமாகக் கண்டிருந்தும் எனலுமாம். (7) "இப்பிறவி யாட்கொண்டு - இனிப் பிறவாமே காத்து" - (திருவாசகம்). (11) செல்வு - செல்வம்.

பக்கம் - 550. (10) தென்னவன் - இராவணன். "தென்னவர்ப் பெயரிய துன்னந் துப்பின்" மதுரைக்காஞ்சி).

பக்கம் - 551. (2) செருடக் கடிமலர்ச் செல்வி - சிரீஷபுஷ்பம் போன்ற மென்மையள் - உமை. வடமொழி இலக்கியங்களுள் சிரீஷபுஷ்பம் மென்மைக்கு எடுத்துக் காட்டாகக் கூறப்படுவது. சிரீஷம் = வாகைமரம்.

பக்கம் - 561. (10) சீரம் ஆக - கலப்பையை யூன்றுவதுபோல் எனலுமாம். சீரம் - கலப்பை.