70பெயர் விளக்கம்

 

திருப்பள்ளியின் முக்கூடல் 1495 சோழநாட்டில் காவிரிக்குத் தென்கரையில் 86-வது தலம். இப்போது அரிக்கரியான்பள்ளி என்று வழங்கப்படும். சுவாமி முக்கோணநாதர்; அம்மை மைமேவுங் கண்ணி என்பது மைமேவுங் கண்ணியாளோர் பாதியனை என்று பதிகத்துட் போற்றப்பட்டது. வெட்டாறு என்ற புகைவண்டி நிலையத்தினின்றும தென்கிழக்கே, ஒரு நாழிகையளவில், உள்ளது. திருவாரூர்ப் பாதை சிரமம். நொடிக்கால் பாளையம் என்ற புகைவண்டி நிலையம் அணிமையில் அமைந்தது.

திருப்பழையாறை 1457, 1480 சோழநாட்டுத்தலம்; தலவிசேடம் 303 பக்கம்.

திருப்பாசூர் 1603, தொண்டைநாட்டுத்தலம்; பக்கம் 576.

திருப்பாதிரிப்புலியூர் 1396, 1398, திருநாவுக்கரசர், சமணர்கள் கல்லாற்கட்டிக் கடலிற் போகட்டபோது, கரையேறிய தலம்; தலவிசேடம்; பக்கம் 177.

திருப்பாலைந்துறை 1464, சோழநாட்டுத்தலம்; தலவிசேடம்; பக்கம் 315.

திருப்புகலி 1496, சீகாழியின் பன்னிரண்டு பெயர்களுள் பத்தாவது பெயர்.

திருப்புகலூர் 1496, 1497, சோழநாட்டுத்தலம்; பக்கம் 386.

திருப்புத்தூர் 1667, பாண்டி நாட்டுத்தலம்.

திருப்புன்கூர் 1454, சோழநாட்டுத்தலம்.

திருப்பூந்துருத்தி 1651, சோழநாட்டுத் தலம்.

திருப்பூவணம் 1672, பாண்டிநாட்டுத் தலம்.

திருப்பெருவேளூர் 1528, பக்கம் 447.

திருப்பெண்ணாகடம் 1413 நடுநாட்டுத் தலங்களுள் ஒன்று; பெண்ணாகடம் தலப் பெயர்; தூங்கானை மாடம் கோயிலின் பெயர்; தலவிசேடம் பக்கம் 211.

திருப்பைஞ்ஞீலி 1568, சோழநாட்டுத்தலம்; பக்கம் 525.

திருமயிலாடுதுறை 1455, சோழநாட்டுத் தலங்களில் ஒன்று; கௌரிமாயூரம் என்று வழங்கப்படுவது; தலவிசேடம்; பக்கம் 288.

திருமயிலாப்பூர் 1596, தொண்டைநாட்டுத்தலம்; ஆளுடையபிள்ளையார் எலும்பைப் பெண்ணாக்கியருளிய தலம் என்று சிறப்பா யறியப்படுவது; அவர் புராணம் பார்க்க. மயிலை என்று வழங்கப்படும்.

திருமருகல் 1505, சோழநாட்டுத்தலம்; தலவிசேடம்; பக்கம் 408 பார்க்க.

திருமறைக்காடு 1528. இது வேதாரணியம் என்று தேற்றமாய் அறியப்படுவது; தலவிசேடம்; 487 பக்கம்.

திருமாணிகுழி, 1401 நடுநாட்டுத் தலங்களுள் ஒன்று; பக்கம் 2374 (முதற்பகுதி); தலவிசேடம் பார்க்க.1

திருமாற்பேறு 1592 தொண்டை நாட்டுத்தலம்; பக்கம் 553.

திருமுதுகுன்றம் 1419, நடுநாட்டுத் தலங்களுள் ஒன்று. விருத்தாசலம் என்று தேற்றமாய் வழங்கப்படுவது; தலவிசேடம் 217 பக்கம்.

திருமுனைப்பாடி நாடு 1267, நாயனார் அவதரித்த நாடு; ஆளுடையநம்பிகள் அவதரித்த நாடுமாம். "தேவரு மறையு மின்னமுங் காணாச் செஞ்சடைக் கடவுளைப் பாடி, யாவரு மதித்தோர் மூவரி லிருவர் பிறந்தநாடிருந்தான்னாடு" என்று வில்லிபுத்தூரரும் பாடிப் போற்றினார்.

திருவதிதைவீரட்டானம் 1307, 1321, 1325, 1326, 1327, 1331, 1334, 1356, 1407, 1413. திருநாவுக்கரசு நாயனாரை இறைவர் ஆட்கொண்டருளிய தலம்; பக்கம் 55.