திருநின்ற
சருக்கம் :- இது, நிறுத்த முறையானே, ஐந்தாவதாகத்,
திருத்தொண்டத்தொகையினுள் "திருநின்ற"என்று தொடங்கும் நான்காவது
திருப்பாசுரத்திலே துதிக்கப்பட்ட அடியார்களின் சரிதங்களைக் கூறும் பகுதி. அந்த
அடியவர்களாவார், திருநாவுக்கரையர், குலச்சிறையார், பெருமிழலைக் குறும்பர்,
பேயரர் (காரைக்காலம்மையார்), அப்பூதியார், நீலநக்கனார், நமிநந்தியார் என்ற
எழுவர். |