| (இ-ள்.) வெளிப்படை. பழைய முறைமைப்படி வருகின்ற மண்ணின் துகளாகிய புழுதியேயன்றி, வேறு துகள் என்னும் குற்றமில்லாத நல்லொழுக்கத்தின் நன்மையாற் சிறந்த குடிகள் பெருகி, உச்சியிற் சந்திரன் தவழும்படி உயர்ந்த அழகிய மாடங்களையுடைய செழும்பதிகள் நிலைத்து நிறைந்து உள்ளது திருமுனைப்பாடி என்னும் வளப்பம் பொருந்திய நாடு. |
| (வி-ரை.) தொன்மை முறைவரும் மண்ணின் துகள் என்றது மண் புழுதியுடையது என்ற பழையமுறை குறித்தது. "தொன்றுதொடு நிலையாமை மேயவினைப் பயத்தாலே" (1292) என்ற கருத்தை இங்கு வைத்துக்காண்க. |
| ஒழுக்கத்துத் தொன்மை முறை நலம் - என்று கூட்டியுரைப்பினும் மமையும். |
| துகள் - முன்னையது மண்புழுதி, பின்னையது குற்றம், என்ற பொருளில் வந்தது. சொற்பின் வருநிலை என்ற அணி. |
| நன்மைநிலை ஒழுக்கத்து நலஞ்சிறந்த குடி - இங்கு வேளாண் முதலாகிய குடிகளைக் குறித்தது. "அனைத்துவித நலத்தின்கண் வழுவாத நடைமரபிற் குடி" (1280) என்று பின்னரும் இதனையே தொடர்ந்து கூறுதல் காண்க. இச்சரிதமுடைய நாயனார் வேளாளர் என்பது, அவ்வச்சரிதமுடைய நாயன்மார்களின் குடிச்சிறப்பைப் பற்றியே நாட்டுச் சிறப்பு நகரச் சிறப்புக் கூறுதல் ஆசிரியர் மரபு என்பதும் உன்னுக. |
| சென்னிமதி புனையவளர் - தலையிற் சந்திரனைப் புனைந்து கொள்வதற்காக வளர்வன போன்ற என்னும் தற்குறிப்பேற்றக் குறிப்பும் காண்க. |
| சென்னிமதி புனைதல் - சிவசாரூப நிலைகளுள் ஒன்றாதலால் இந்நாட்டுப் பெரு மக்கள் சிவனது நிலையைப் பெறும் சிவசாதன வழி நிற்பவராதல்போல, மாடங்களும் அந்நெறியில் வளர்ந்தன என்றதொரு தொனிக்குறிப்பும் காணத்தக்கது. "சென்னி வளர் மதியணிந்த" (திருஞான - புரா - 2) என்றது பார்க்க. |
| மன்னுதல் - காலபேதத்தால் மாறுபடாது நிலைத்தல். |
| நிறைதல் - நெருங்குதல், நாடு நிறைதற்கிடமாக உள்ளது என்க. |
| முனைப்பாடி நாடு - குடிமல்கிவளர் - மாடச் - செழும்பதிகள் நிறைந்துளது என்று முடிக்க. |
| நாட்டு வளம் பலவற்றுள்ளும் நல்லொழுக்கமுடைய குடிகள் வாழ்ந்திருப்பதுவே இன்றியமையாத சிறப்பாவது என்று காட்ட அதனை முதற்கண் விதந்தோதினார். "தக்காருந் தாழ்விலாச் செல்வருஞ் சேர்வது நாடு" என்று இக்கருத்துப் பற்றியே திருக்குறளினுள்ளும் இதனை முதலில் வைத்தோதியதும் குறிக்கொள்க. |
| நன்னிலைமை - குடிபல்கி - என்பனவும் பாடங்கள். |
|
2 |
|
1268. |
புனப்பண்ணை மணியினொடும் புறவினறும் புதுமலரின்
கனப்பெண்ணி றிரைசுமந்து கரைமருங்கு பெரும்பகட்டேர் |