- xiv -

யெடுத்துக் கொண்டிருக்க வேண்டு மென்பதும், இவ்வுரை எவ்வளவு
திருத்தம் பெற்றள்ள தென்பதும் நடுநிலைமுதலிய உயர்குணங்களுடையராய்
ஒத்து நோக்கும் அறிவுடையா ரெவர்க்கும் நன்கு புலனாமாகலின், இங்கு
அவைகள் எடுத்துக்காட்டப் பெற்றில.

இவ்வுரை யெழுதுவதில் எனக்குத் துணையாயிருந்து எழுதியுதவி
வந்தோர் தமிழ் இலக்கிய இலக்கணங்களிலும் திருமுறைகளிலும் நல்ல
பயிற்சியும் கூரிய அறிவும் வாய்ந்துளாரும், தமிழ்ப்பற்றும் சிவபத்தியும்
மிக்காரும் ஆகிய என் இனிய நண்பர் திருவாளர் அ. மு. சரவண
முதலியாரவர்களாவர். அவர்களுதவி இருந்திராவிடில், பலவினைச்
செறிவுடைய என்னால் இப்பொழுது இவ்வுரை யெழுதியிருக்கவொண்ணாது.
கழகத்தாரும யானும் அவர்கட்கு நன்றி பாராட்டுங் கடமைப் பாடுடையோம்.

கல்வி அறிவு ஆற்றல்களில் மிகவும் சுருங்கியவனாகிய யான் பல
வேலைகளுக்கிடையே எழுதிவந்த இவ்வுரையில் எத்தனையோ பல குற்றங்கள்
காணப்படக்கூடும். அவற்றைப் பொறுத்தருளுமாறு பெரியோர்களை மிகவும்
வேண்டுகின்றேன்.

ஒன்றுக்கும் பற்றாத என்னை இம்முயற்சியிற் புகுத்தி இதனை நிறை
வேற்றுவித் தருளாநின்ற பரங்கருணைத் தடங்கடலாகிய சோமசுந்தரக்
கடவுளின் திருவடித் தாமரைகளை எஞ்ஞான்றும் சிந்தித்து வாழ்த்தி வணங்க
உன்னுவதன்றி எளியேன் செய்யக் கிடந்தது யாதுளது?

“ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே.”

ந. மு. வேங்கடசாமி.