| குங்குமம்
|
- குங்கும
மரம் |
| குங்குமக்
காண்டம் |
- குங்குமம்
கலந்த நீர் |
| குச்சை
|
- இரத்தினப்
பரீட்சை முறைகளில் ஒன்று |
| குஞ்சரக்
கொடி |
- தெய்வயானை
நாச்சியார் |
| குஞ்சரக்
கோதை |
- தெய்வயானை
நாச்சியார் |
| குஞ்சரம்
|
- யானை
|
| குஞ்சி
|
- மயிர்
|
| குட்டிய
|
- குழறிய
|
| குடக்கு
|
- மேற்கு
|
| குடக்
கோச் சேரன் |
- சேரமான்
பெருமாள் |
| குட கடல்
|
- மேல்
கடல் |
| குடங்கை
|
- உள்ளங்கை
|
| குடத்தியர்
|
- இடைச்சியர்
|
| குடம்பை
|
- கூண்டு
|
| குடிபோய்வித்த
|
- ஓட்டுவித்த
|
| குடிமனையவர்
|
- பொதுமகளிர்
|
| குடிமுதல்
|
- குடிக்கு
முதல்வி |
| குடுமி
|
- உச்சி,
நுனி |
குடுமியம்
பெருந்
தழல் |
- கொழுந்து
விட்டு எரியும் வடவைத் தீ |
| குண்டம்
|
- ஓம
குண்டம் |
| குண்டு
|
- ஆழம். |
| குண்டு
அகழ் |
- ஆழ்ந்த
கடல் |
| குண்டு
நீர் |
- ஆழ்ந்த
நீர்ப் பரப்பு (கடல்) |
| குணங்கு
|
- பேய்
|
| குணம்
|
- நற்குணம்
(சத்துவம், இராசதம், தாமதம்,
ஆகிய மூன்று குணம்) |
| குதட்டுதல்
|
- அதுக்குதல்,
மெல்லுதல் |
| குதட்டினை
|
- மென்று
தின்றனை |
| குதர்ந்து
|
- அழிந்து
|
| குதலை
|
- குழந்தையின்
உருத் தெரியாத சொல்,
மழலைப் பேச்சு |
| குமிழ்
|
- குமிழ
மலர் |
| குமிழ்த்த
|
- வடிவங்கொண்ட
|
| குமுதம்
|
- அல்லி
மலர் |
| குயிற்றுதல்
|
- செய்தல்,
அழுத்துதல், இரத்தினம் வைத்து
இழைத்தல் |
| குரங்கம்
|
- மான்
|
| குரம்பை
|
- சிறு
குடில் |
| குரவம்
|
- கடம்ப
மலர் |
| குரவு |
- கடம்பு
|
| குரவை
|
- ஆடவரும்
மகளிரும் இடையிடையே கலந்து
கைகோத்து ஆடும் ஒரு வகை கூத்து |
| குரவை
வாய் |
- குரவைப்
பாட்டைப் பாடும் வாய் |
| குரல்
|
- கழுத்து,
ஓசை |
| குரிசில்
|
- தலைவன்
|
| குரு |
- நிறம்
|
| குருகு |
- வளையல்,
பறவை, நாரை |
| குருகு அமர்
பொருப்பு |
- கிரவுஞ்ச
மலை |
குருகு பெயர்க்
குன்றம் |
- கிரவுஞ்ச்
மலை |
| குருதி
|
- இரத்தம்
|
| குருவி
|
- பறவை
(சக்கரவாகம்) |
| குருவிந்தம்
|
- இரத்தின
சாதிகளுள் எட்டுவகை
நிறமுடையது;குன்றிமணி, முயல் குருதி,
விளாம் பூ, பலாசம் பூ, மஞ்சாடிப் பூ,
செல்வரத்தம் பூ, முள்ளிலவம் பூ, எரிபொன்,
என்னும் இவை |
| குருளை
|
- குட்டி
|
| குரைகழல்
|
- ஒலிக்கும்
கழல் அணிந்த திருவடி |
| குரைப்பு
|
- குரைத்தல்
|
| குல உடு
|
- கூட்டமாய
விண்மீன் |
| குலக்கடை
|
- பெரிய
வாயில் |
| குலம்
|
- கோயில்
|
| குலமீன்
|
- உயர்ந்த
நட்சத்திரம் அருந்ததி |
| குலன்
|
- தம்
இனம் |
| குலை |
- செய்
கரை |
| குவடு |
- மலை
|
| குவலயத்
திருமலர் |
- அழகிய
நீலோற்பல மலர், கருங்குவளை |
| குவளை
|
- கழு
நீர் மலர் |
| குவால்
|
- குவியல்
|
| குவை |
- தொகுதி
|
| குழகன்
|
- இளையோன்,
அழகன், முருகன் |
| குழமகன்
|
- விளையாடும்
வண்டற் பாவை, மரப் பாவை |
| குழல்
|
- கூந்தல்
|
| குழவி
|
- குழந்தை
|
| குழவி
அம் கதிர் |
- இளஞ்
சூரியனது அழகிய கிரணம் |
குழவி
அம்
கிழவோன் |
- இளமுருகன்
|
| குழவிப்
பிறை |
- இளம்
பிறை |
| குழு |
- தொகுதி,
கூட்டம் |
| குழை |
- காதணி;
தழை; இலை |
| குழை முகம்
|
- தளிரிடம்,
குழைகின்ற முகம் |
| குழைய
|
- வாட
|
| குளம்
|
- நெற்றி
|
| குளமகன்
|
- முருகன்
|
| குளவன்
|
- சரவணப்
பொய்கையில் தோன்றிய முருகன் |
| குளறல்
|
- ஒலித்தல்
|
| குளிக்குநர்
|
- குளித்தெடுப்பவர்
|
| குளிசெய்யும்
|
- நீராட்டும்
|
| குளிர்தல்
|
- ஒலித்தல்
|
| குளிறும்
|
- முழங்கும்
|
| குற்றுழி
|
- சிறிய
இடம் |
| குறவத்துணைவியர்
|
- குறத்தியர்
|
| குறள்
|
- பூதம்
|
| குறி |
- அடையாளம்
(இலக்கணம்) |
| குறித்தல்
|
- கருதுதல்,
சொல்லுதல் |
| குறித்து
|
- சுட்டி
|
| குறிநிலை
மயக்கு |
- மயக்க
நிலை குறிப்பு |
| குறிபடைத்து
|
- குறி
கொண்டு |
| குறியா
|
- சொல்ல
இயலாத |
| குறியினர்
|
- குறிப்புடையார்
|
| குறியுடை
நல் நாள் |
- குறித்த
நல்ல நாள் |
| குறுஞ்
சொல் |
- இளஞ்
சொல் |
| குறுநகை
|
- புன்சிரிப்பு
|
| குறுமுனி
|
- அகத்தியன்
|
| குறுமுனி
பெறுமறை |
- அகத்தியன்
பெற்ற மந்திரப் பொருளாக
உள்ளவன் |
| குறை |
- மணல்
திடல் |
| குறைத்தல்
|
- நறுக்குதல்
|
| குறையாது
இரட்ட |
- ஒலி
குறையாமல் உச்சரிக்க |
| குன்றம்
|
- மலை
|
| குன்றி
|
- குன்றி
மணி |
| குனித்தல்
|
- ஆடுதல்
|