| முக்கண்
|
-
மூன்று கண் (சந்திரன், சூரியன், தீ) |
| முக்கவர்த்
திருநதி |
- திரிவேணி
சங்கம்; மூன்று ஆறுகள் ஒன்று
சேரும் இடம் |
| முக் கவை
|
- மூன்று
பிரிவுள்ள |
| முக் குறி
|
- மூன்று
சிவ சின்னங்கள்; சடைமுடி,
உருத்திராக்க மாலை, திருநீறு |
| முகடு |
- உச்சி
|
| முகம்
படைத்து |
- முகம்
பெற்று |
| முகம்
புலம்ப |
- யாழ்முகம்
ஒலிப்ப |
| முகமன்
|
- உபசாரம்,
உபசாரச் சொற்கள் |
| முகன்
உற |
- பொருந்த
|
| முகன்
கொளின் |
- முகம்
பார்ப்பின் |
| முகில்
|
- மேகம்
|
| முகிழ்
செய்து |
- தோன்றி
|
| முகிழ்த்த
|
- தோன்றின
|
| முகிழ்நகை
|
- புன்சிரிப்பு
|
| முகிழ்ப்ப
|
- கூப்ப
|
| முகை |
- அரும்பு
|
| முசு |
- குரங்கின்
பிரிவில் ஒன்று (தேவாங்கு) |
| முசுக்கலை
|
- ஆண்முசு
|
| முடக்கு
|
- வளைவு
|
| முடங்கல்
|
- வளைவு
|
| முடங்கு
அதள் |
- சுருட்டி
வைத்திருந்த தோல் |
| முடங்குளை
|
- நெருங்கிய
பிடரிமயிருடையது, சிங்கம் |
| முடி நடுநர்
|
- நாற்றுமுடி
நடுவோர் |
| முடியாப்
பதி |
- முடிவில்லாத
பதி |
| முடைத்தலை
|
- தீய
நாற்றம் வீசும் இடம் |
| முண்டகம்
|
- தாமரை,
நீர் முள்ளிச் செடி, தாமரை
மொட்டு |
| முத் தழல்
|
- மூன்று
தீ (காருக பத்தியம், ஆகவனீயம்,
தக்கிணாக்கினி) |
| முத் தழல்
களம் |
- மூன்று
அழலால் ஓங்கிய ஓம குண்டம் |
| முத்தழற்குடையோன்
|
- வேள்வித்
தலைவன் |
| முதல்
|
- காரணம்
|
முதல்
தொழில்
இரண்டு |
- படைத்தலும்
காத்தலும் |
| முதல்
நிலை |
- முதன்மை
|
| முதற்
கவி |
- திருவள்ளுவ
மாலையின் முதற் பாட்டு |
| முதிரா
நாள் |
- காலமல்லாக்
காலம் |
| முதியவன்
|
- நான்முகன்
|
| முதியோர்
|
- முது
பெண்டிர் |
| முதியோள்
|
- வயது
மிக்கவள் (குறி சொல்வோள்) |
| முதுக்
குறை |
- பேரறிவு
|
| முதுக்
கொள |
- பழமைகொள
|
| முதுநீர்
|
- பழமையான
நீர்ப் பரப்பு (கடல்) |
| மும்முலை
ஒருத்தி |
- தடாதகைப்
பிராட்டியார் |
| முயங்கி
|
- தழுவி,
பொருந்தி |
| முயல்
|
- (போர்)
முயற்சி; ஒரு சிறு விலங்கு |
| முயல்
உடல் |
- கறை
உடல், (முயல் வடிவமாகக் கறையைக்
கொண்ட உடல்) சந்திரன் |
| முரசு |
- ஒருகண்
பறை |
| முரம்பு
|
- கரடு
முரடான மேட்டு நிலம் |
| முரலும்
|
- ஒலிக்கும்
|
| முருகு |
- மணம்
|
| முருகு இயம்
|
- வெறியாட்டுப்
பறை |
| முருகு உயிர்த்து
|
- மணம்
வீசி |
| முருங்க
|
- சினந்து
நடுங்க, அழிய, முறிய |
| முருந்து
|
- மயில்
இறகின் அடிபோன்ற பல் |
| முல்லையந்
திருமகள் |
- முல்லை
நிலமாய பெண் |
முல்லையந்
திருவினள் |
- அறக்
கற்புடைய திருமகள் |
| முழக்கி
மெய் கவரும் |
- குரைத்து
உண்மை அறியும் |
| முழுது உணர்
ஞானம் |
- பேரறிவு
|
| முழை |
- குகை
|
| முளரி
|
- தாமரை
மலர் |
| முளரி
நீர் புகுத்திய |
- தாமரை
மலரின் தன்மையைத் தோற்கச்
செய்த |
| முற்றிய
|
- நிறைவேற்றிய,
வென்ற |
| முறிக்
கலைச் சுருக்கு |
- துண்டு
செய்த துணியின் சுருக்கு |
| முறித்த
|
- முறியடித்த
|
| முறித்து
|
- ஒடித்து
|
| முறிமுகம்
|
- தளிர்
முகம் |
| முறை முறை
வாய்ப்ப |
- முறையாக
நடக்க |
| முன்பு
|
- வலிமை
|
| முன் உகு
விதி |
- ஆதிப்
பிரமன் |
| முன்றில்
|
- வெளியிடம்,
முற்றம் |
| முன்னி
|
- கருதி,
முற்பட்டு |
| முனகர்
|
- கீழ்மக்கள்
|
| முனி நால்வர்
|
- சநகர்,
சநந்தனர், சநாதனர், சநற்குமாரர் |
| முனை |
- போர்முனை
|
| முனை எறி
|
- பகைமையை
வெல்கின்ற |
| முனைப்
படை |
- கூரிய
ஆயுதம் |
| முனைப்பது
|
- எதிர்ப்பது
|