7

பல்கலைக் கழகங்களின் பேரவை (செனட்) அங்கத்தினராக
இருந்தார் .மேலும்கேரளம், மைசூர், உஸ்மானியா, பெங்களூர்,
ஆந்திரா ,டில்லி, கேம்பிரிட்ஜ், மதுரை முதலிய பல்கலைக்கழகங்களின்
பாடத்திட்டக் குழுவில் இருந்தார்.இலங்கை, மலாயா, காசி,
உத்கல் முதலிய பல்கலைக் கழகங்களோடு தொடர்பு கொண்டிருந்தார்.

அவர் புதுடில்லியில் உள்ள சாகித்திய அகாடெமி, பாரதிய
ஞானபீடம்,தேசியப் புத்தகக் குழு,இந்திய மொழிக் குழு,
சென்னைப் பல்கலைக்கழகம் தயாரித்த ஆங்கிலம்-தமிழ் அகராதிக்
குழு,நாட்டுப்புறப் பாடல்களும் நாட்டுப்புற நடனங்களும் பற்றிய
குழு முதலியவற்றில் அங்கம் வகித்தார்.

அவர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணைக்குழுவிலும்,
ஆந்திரப்பிரதேசஅரசுப்பணியாளர் தேர்வு ஆணைக் குழுவிலும்,
மகாராட்டிர சமிதி மண்டலத்திலும் பங்கு கொண்டிருந்தார்.

தமிழ்நாடு புத்தக வெளியீட்டுக் கழகம்,ஆட்சிமொழிக்குழு,
ஆட்சிமொழிச்சட்டக்குழு, தமிழ் வளர்ச்சிக் கழகம்,தமிழ்க்கலை
மன்றம் , தமிழிசைச் சங்கம். மாநில வரலாற்றுக் கழகம்,தமிழ்க் கலைக்
களஞ்சியம், தமிழகப் புலவர் குழு,உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்
முதலியவற்றில்பங்குகொண்டுசிறந்த தொண்டாற்றினார்.

பன்மொழிப்புலமை

அவர் தமிழ். ஆங்கிலம், தெலுங்கு,மலையாளம், கன்னடம், இந்தி முதலியமொழிகளைக்கற்றுப்பன்மொழிப்புலவராகத்திகழ்ந்தார்.

உலகம்சுற்றியமுதல் தமிழ்ப் பேராசிரியர்

அவர்ரஷ்யா, மலேசியா,சிங்கப்பூர்,பாரீஸ்,இலங்கை,இங்கிலாந்து,
பிரான்சு,ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி,கிரேக்கம்,எகிப்து,ஆப்பிரிக்கா,
அமெரிக்காமுதலியஉலகநாடுகளை எல்லாம் சுற்றிப் பார்த்த முதல்
தமிழ்ப்பேராசிரியராகவிளங்கினார்.