9
துன்பத்தில் துணைநிலை
புலமையில் ஆழம்
ஆராய்ச்சியில் நடுநிலைமை
இல்லத்தில் துறவு
பதவியில் பகட்டுஇன்மை
பரட்சியில் முதன்மை
பண்பில் சால்பு
அறத்தில் நம்பிக்கை
புகழில் மயங்காநிலை
செல்வத்தில் செருக்கின்மை
விளம்பரத்தில் விருப்பின்மை

தமிழில் தமிழ்நெஞ்சம் கொண்டவர் ஆவார். நம் நெஞ்சம் மறவாத
தமிழ்நெஞ்சத்தின் பெருவாழ்வு இதுவே.

பெருமகன்போற்றிய பெருமக்கள்

காந்தியடிகள்,திரு.வி.க., தாயுமானவர், இராமதீர்த்தர், இராமலிங்க
சுவாமிகள், இராமகிருட்ணர்,விவேகானந்தர்,திருநாவுக்கரசர்,
மாணிக்கவாசகர்,நம்மாழ்வார், கவிஞர்தாகூர், காண்டேகர், பெர்னார்ட்ஷா,
சாமர்செட்மாம்முதலியோர்அவர் விரும்பிப் போற்றியபெருமக்கள்
ஆவர்.

உயிருள்ள படைப்புகள்

தமிழ்த்தாயின் தலைமகனாக விளங்கிய அவர்,62 வயதில் 85
நூல்கள்எழுதிஇணையில்லாப்புகழ்பெற்றார்.பல்வகையான முதல்
தரமான நூல்களைத் தந்த தமிழ்ச் சுரங்கமாக அவர் விளங்கினார்.

1. நாவல். . . . .13

1. செந்தாமரை
2. கள்ளோ? காவியமோ?
3. பாவை
4. அந்த நாள்
5. மலர் விழி
6. பெற்ற மனம்
7. அல்லி