|
கிளியம்மா
சில நாள் பிரிவுக்கு பின்னர்
ஒருவன் தன் காதலியைக் காணுகிறான். ஆசை மேலீட்டால்
என்னென்னவோ பிதற்றுகிறான். அப்பிதற்றுதலில்
எழுந்த பாடல் தான் இது.
| |
கன்னங்
கருத்த புள்ளே
கை
மோதிரம் தோத்த புள்ளே
உள்ளங்கை
தேனா
உருகரண்டி உன்னாலே
இடியிடித்து
மழை பொழிய
இருண்ட
வெள்ளம் திரண்டுவர
குடை
பிடித்து நான் வருவேன்
குயிலாளே தூங்கிடாதே
ஓட்டைக்
கரண்ட கமாம்
ஓசையிடும்
வெண்கலமாம்-உன்
காட்டு
மரிக் கொளுந்தை-கொஞ்சம்
காட்டி விட்டா லாகாதா?
ஆலமரத்தைப் பாரு
அடிமரத்து வேரப்பாரு
குண்டஞ்
சம்பா நெல்லப் பாரு-
புள்ள
கிளியம்மா
குட்டிபோர
சோக்கப் பாரு-
போடு
தின்னாக்கு
ஆத்துக்கு
அந்தாண்ட
அத்தைமகள்
ரெண்டு பேரு
கொட்ட
மரம் வெட்டயிலே-
புள்ள கிளியம்மா
போட்டாண்டி
பொட்டுத்தாலி-
போடு
தின்னாக்கு
வட்ட
வட்டப் பாறையிலே
வர
கரிசித் தீட்டயிலே
ஆர் கொடுத்த சாயச்
சீலே-
புள்ளக் கிளியம்மா
ஆலவட்டம்
போடுதடி-
போடு
தின்னாக்கு
கூடமேலே கூட வச்சு
கோயிலுக்கு போர பொண்ணே
கூடை அரப் பணமா?-உன்
கொண்டப் பூ காப்பணமா?
சட்டி
மேலே சட்டி வச்சு
சந்தைக்குப்
போரப் புள்ளே
சட்டி அரப்பணமா?-உன்
சாமந்திப்பூ காப்பணமா? |
வட்டார வழக்கு
:
தோத்த-தோற்ற
;
வேரப்பாரு-வேரைப்பாரு
;
அந்தாண்ட-அந்தப்
பக்கம்
;
பத்துலன்னு-பற்றவில்லை
என்று
;
வெளுக்கரண்டி-உதைக்கிராண்டி.
|
சேகரித்தவர்:
சந்திரன் |
இடம்:
வாழப்பாடி,
சேலம் மாவட்டம்.
|
|