காத்திருந்து வீணாச்சு!

அவர்கள் உறவு சிறு வயது சேர்க்கையில் பிணைக்கப்பட்டது. இருந்தாலும், அவள் இன்று வேறொருவனுக்கு மனைவி, குடு்ம்பத்தின் நி்ரப்பந்தத்தால் அவள் உரிமை இன்னொருவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தாலும் அவள் உள்ளம் மட்டும் தனது காதனிலடமே குடிகொண்டிருந்தது.

தேங்காய் மூடியின் உள்பரப்புப் போன்ற பள்ளமான இடம், காதலர் களித்து மகிழ ஏற்ற இடம். வாய்க்கால் ஓடுகிறது. தண்ணீர் எடுக்க அவன் காதலி அங்கு தினம் வருவது வழக்கம். ஒருநாள் அவளை அவன் சந்திக்கிறான். அவன் பேரில் அவளுக்கு ஒரே ஆசை, மாற்றான் மனைவி என்னும் உரிமை அவனைத் தடுக்கிறது. இருந்தாலும் பழைய உறவு அவனை உசுப்புகிறது.

“தாகமாயிருக்கிறது. தண்ணீர் கிடைக்குமா?”என்று அவளைக் கேட்கிறான்.

அவனைப் போன்றே அவள் உள்ளத்திலும் போராட்டம். அவன் என்ன கேட்கிறான் என்பதை பார்வையின் மூலம் புரிந்து கொள்கிறாள். “நீருண்டு, வீட்டுக்கு வந்தால்நல்ல தண்ணீர் கிடைக்கும்” என்று வீட்டின் அடையாளத்தைக் காட்டிவிட்டு சென்று விடுகிறாள்.

இரவு நேரம், அடையாளம் குறிப்பிட்ட தென்னை மரத்தடியில் அவன் வந்து அமர்ந்திருக்கின்றான். தனது வருகையை ஏதோ குறிப்பு மூலம் அவளுக்குத் தெரியப்படுத்துகிறான்.

அவளுக்கு என்ன செய்வதென்று புலப்படவில்லை. ஒரு பக்கம் தனது கள்ளக் காதலனை திருப்திப்படுத்த வேண்டும். மறுபுறம் அழும் குழந்தையையும், அடுப்பில் காயும் பாலையும் கவனிக்க வேண்டும். போதாக் குறைக்கு பாலகனைப் பெற்ற பாட்டனார் வேறு தூங்காமல் படுத்திருக்கிறார். தனது காதலனைச் சந்திக்க முடியுமென்ற நம்பிக்கையை இழக்கிறாள். குழந்தைக்குத் தாலாட்டுச் சொல்வது போல தான் வர முடியாத நிலையை உணர்த்துகிறாள்.

அவனுக்கு இதெல்லாம் காதில் விழவில்லை போலும் அவள் வரவை எதிர்பார்த்துக் கொண்டே அமர்ந்திருக்கிறான். கிழக்கு வெளுத்தது. அவனுக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. விரகதாபம் அவனை ஏது சொல்வதென்றே தெரியாமல் சொல்ல வைக்கிறது,