|
கிளியம்மா
திருவிழாவுக்கு ஊரே திரண்டு போகிறது. ஒரு இளம் பெண், தனது காதலனுக்கு
வழியில் கொடுப்பதற்கென்று பிட்டு வாங்கி மறைத்து வைத்திருந்தாள். அவன் ஆண்கள் கூட்டத்தில்
சேர்ந்து போய்க் கொண்டிருந்தான். வழிநெடுக பிட்டைக் கொடுக்க முடியவில்லை. அவனுக்கு
கொடுக்காமல், தான் தின்னலாமா? அவளுடைய தோழி கிளியம்மாவுக்கு இது தெரியும். அவள் வேடிக்கையாகப்
பிட்டைக் கேட்கிறாள். அப்பொழுது தனது கவலையை அவளுக்குத் தெரிவிக்கிறாள் காதலி.
ஆத்துல எடுத்த கல்லாம்
புள்ளே கிளியம்மா
அழகா குழவிக்கல்லாம்
புள்ளே கிளியம்மா
மஞ்சள் ஒரைக்கும் கல்லாம்
புள்ளே கிளியம்மா
ஆசைக்குத்தான் புட்டு வாங்கி
புள்ளே கிளியம்மா
குடுக்கனெண்ணும் நானிருந்தேன்
புள்ளே கிளியம்மா
கூட்டத்திலே போறானடி
புள்ளே கிளியம்மா
குடுக்க முடியலியே
புள்ளே கிளியம்மா.
பலவிதமானக் கல்லைக் குறிப்பிடுவது, ஒரு கல்லில் தனித்து உட்காரும்படி
காதலனுக்குக் குறிப்பால் உணர்த்துவது. அவன் தனித்தால் பிட்டைக் கொடுத்து விடலாம் அல்லவா
?
|
சேகரித்தவர்:
சடையப்பன் |
இடம்:
அரூர்,
தருமபுரி மாவட்டம்.
|
|