அந்த ஆசை வேண்டாம்

பெரிய இடத்துப் பையன் அவளைச் சுற்றிச் சுற்றி வருகிறான். அவன் பல மலர்தேடும் வண்டென்று அவளுக்குத் தெரியும் ! அவன் முகத்திலடித்தாற்போர் அவள் பாடுகிறாள் !

பேரீச்சம் பழமே-நீ
பெரிய இடத்துக்கிரீடமே
ஏனையா காத்திருக்க?
ஏலரிசி வாசகமே

வள்ளத்தான் குருவி போல
வட்டம் போட்டு வந்தாலும்
ஆப்பிடு வாண்ணு சொல்லி
அந்த ஆசை வய்யாதே

வட்டார வழக்கு : ஆப்புடுவா-அகப்படுவாள் ; ஏலரிசி வாசகமே-விளிச் சொல்.

சேகரித்தவர் :
S.S.போத்தையா

இடம் :
நெல்லை மாவட்டம்.