|
வட்ட வளவிக் காரி
வளத்தட்டு சீலக்காரி
கோதுமை பச்சைக்காரி
கோபம் உண்டோ என்மேலே
நாணத்தட்ட
சோளத்தட்ட
நாலுகைக்
கம்மந்தட்ட
கம்மந்தட்ட
வீட்டுக்காரி
காட்டம்
உண்டோ எம் மேலே
பல்லு வரிசைக்
கல்லோ
பட்டுக்கரை நேத்திக் கரை
சொல்லு
வரிசைக்கில்லோ-உன்னை
சொந்தமின்னு
எண்ணி ருந்தேன்
ஆனை
நடையாளே
அமிர்த மொழியாளே
செல்ல
நடையாளே-நான்
சில காலம்
பிரிஞ்சிருந்தேன்
படுத்தா
உறக்கம் வல்லே
பாய்
விரிச்சாத் தூக்க மில்லே
உறக்கச்
சடவுலயே-கண்ணே
உன் உருவம்
தோணுதடி
உன்னைய
நம்பி யல்லோ
உட்காந்தேன்
திருணையிலே
என்னைய
மறந்தியானா-நீ
ஈடேறப்
போறதில்லை
வேலி அழிஞ்சுதுண்ணு
விறகுக்கு நீ வாடி
காளை ஒண்ணு
தப்புச் சுண்ணு
காட்டு
வழி நானும் வாரேன்
இண்டு
தழையாதோ?
இண்டம்
நிழல் சாயாதோ?
இண்டு நிழலிலேயே-நாங்க
இருந்து
கவி பாட
மலையிலே
மாட்டக் கண்டேன்
மலைக்கும் கீழே
தடத்தக் கண்டேன்
செவத்தப் புள்ள
கொண்டையிலே
செவ்வரளிப் பூவைக் கண்டேன்
பழைய உறவுக்காரி
பாதையிலே கண்டுக்கிட்டு
அவளழுக, நானழுக
அன்னக்கிளி ஒண்டழுக
|