|
நாளைப் பயணமடி
காதலரிருவர் அன்பு
மிகுதியால் ஒருவருக்கொருவர் உரையாடிக் கொள்கிறார்கள். கடைசியில் அவன்
'நாளைப்
பயணம்'
என்கிறான். அவள்
'நானும்
வருகிறேன்'
என்கிறாள். ஆனால் நடக்குமா?
| பெண்:
|
ஆல
மரமுறங்க
அடி மரத்துக் கொப்புறங்க
பாதையிலே நானிருக்க-நீங்க
பக்க வழி போகலாமா?
|
| ஆண்:
|
வாழையடி
உன்கூந்தல்
வைரமடி
பல்காவி
ஏழையடி நானுனக்கு
இரங்கலையோ
உன்மனசு?
|
| பெண்:
|
சந்திரரே
சூரியரே
தலைக்கு
மேலே வாரவரே
இந்திரர்க்கு இளையவரே-நான்
என்ன சொல்லிக்
கூப்பிடட்டும்
|
| ஆண்:
|
அத்தை மகளே-நீ
அருவங் கொடி
வாயழகி
கோவம் பழத்தழகி-என்னை
கொழுந்தனிண்ணு
கூப்பிடடி
மேற்கே
சூலமடி
மே
மலையும் கோணலடி
நாளைப்
பயணமடி
|
| பெண்:
|
நானும் வாரேன்
கூடப்
போவோம் |
|
சேகரித்தவர்:
S.M.
கார்க்கி |
இடம்:
சிவகிரி, |
|