|
கட்டக் கருத்தப்புள்ள
காலுத்
தண்ட போட்ட புள்ள
உதடு செவத்த புள்ள
மெலியுதனே
ஒன்னால
நாட்டுக்கு
நாடு மட்டம்
நாம ரெண்டும் ஜோடி
மட்டம்
கோட்டுக்குப் போனாலுமே-நம்ம
கோடி ஜனம் கையெடுக்கும்
கிள்ளிய கொசுவத்துக்கோ
கீழ் மடியின் வெத்திலைக்கோ
அள்ளிய தேமலுக்கோ
ஆசை கொண்டேன் பெண் மயிலே!
மலையிலே மாட்டக் கண்டேன்
மலைக்கும் கீழ தடத்தக் கண்டேன்
செவத்தப் புள்ள கொண்டயிலே
செவ்வரளிப் பூவக் கண்டேன்
வெட்டின கட்டயில
வீரியமா பூத்த பூவே
வக்கத் தெரியாம
வாட விட்டேன் தேசவழி
|