|
உன் மயக்கம்
ஓரிளைஞனும், ஒரு இளமங்கையும் காதல் மயக்கத்தில் ஆழ்ந்து உரையாடுகிறார்கள். அவர்களுடைய
உள்ளக் கிளர்ச்சிகளை வெளியிடப் பயன்படுத்தும் உவமைகளும் ஒருவரையொருவர் அழைத்துக்
கொள்ளப் பயன்படுத்தும் விளிச்சொற்களும் சுவையாக இருக்கின்றன.
| ஆண்: |
எண்ணெய்
தேய்த்தல்லோ
எனக்கு முன்னே போரபுள்ள
எண்ணெய்ப்
பளபளப்பு-என்
கண்ணை
மிரட்டுதடி
எண்ணெய்க்குடம் போல
எழும்பி வந்த மேகம் போல
தண்ணிக்குடம் போல
தளும்புதடி என் மனசு
|
| பெண்: |
உங்க
மேனிக்குள்ள
ஊதாக்
கலர் சட்டைக்குள்ள
தோளிலிடும்
லேஞ்சுக்குள்ள
தோகைமயில் ஆசை
கொண்டேன்
|
| ஆண்: |
வாழைக் கொடிக்காலே
வட கொடிக்கால்
வெத்திலையே
போட்டா
செவக்குதில்ல
பெண்மயிலே
உன் மயக்கம்
|
| பெண்: |
சத்தனக்கும்பாவில
சாதம்
போட்டு உண்கையில
உங்களை
நினைக்கையிலே
உண்ணுறது
சாதமில்லை. |
குறிப்பு
:
வாழைக் கொடிக்கால், வட கொடிக்கால் வெற்றிலை, பெண்ணின் அழகுக்கும்
செழிப்பான மேனி வளத்துக்கும் உவமை. வெத்திலை போட்டால் சிவப்பது பற்றிய நம்பிக்கை
முன்னரே குறிப்பிடப்பட்டது.
|
சேகரித்தவர்:
S.M.
கார்க்கி |
இடம்:
சிவகிரி. |
|