|
கொழுந்தன் முகம்
வாடிடாதோ
?
ஏர் கொண்டு உழச் சென்ற தன் கணவன், உச்சி வேளையாகியும் வீடு
திரும்பவில்லை என்பதைக் கண்ட மனைவி கவலை கொள்ளுகிறான். ஒரு வேளை
சீக்கிரமே உழுது
முடித்து விட்டுத் தழை உரத்துக்காக
வண்டி கட்டிக் கொண்டு காட்டுக்குப் போய்விட்டானோ?
வேலை செய்து அலுத்துப் போனால் வீடு வந்து ஓய்வு கொண்டு பின்னர் செல்லக்கூடாதா அவளுக்கு
வீட்டில் இருப்புக் கொள்ளவில்லை. காட்டுக்குப் போகும் பாதையில் கணவனது நண்பர்களை வழியில்
காண்கிறாள். அவர்களைப் பார்த்து அவள் கவலையை வெளியிட்டுக் கீழ் வரும் பாடலைப் பாடுகிறாள்.
மத்தியானம் ஏரவிழ்த்து
மாடு ரெண்டும் முன்னே விட்டு
சாட்டக்கம்பு தோளிலிட்டு
சாமிவரக் கண்டியளோ?
இடை வாரு போட்டவரே
பாதம் சிறுத்தவரே-பெரும்
பாதையிலே கண்டதுண்டோ?
கொழிஞ்சிக் குழை வாடினாலும்
கொழந்தன் வண்டிப் பாரமேத்தி
கொழிஞ்சிக் குழை பிடுங்கி
கொழுந்தன் முகம்
வாடிராதோ?
வாடக்கொடி புடுங்கி
வடகாடு சுத்திவந்து
தேடிக் குழை புடுங்கும் எந்தன்
தேன் மொழியை கண்டதுண்டோ?
வட்டார
வழக்கு:
சாட்டக்கம்பு-சாட்டைக்கம்பு;
போட்டவரே-போட்டவரை;
சிறுத்தவரே-சிறுத்தவரை;
புடுங்கி-பிடுங்கி;
வாடிராதோ-வாடிடாதோ;
தேன்மொழி-பொதுவாக
பெண்முன்னிலை ஆண்முன்னிலையாயிற்று.
|
சேகரித்தவர்:
S.M.
கார்க்கி |
இடம்:
சிவகிரி,
நெல்லை மாவட்டம். |
|