|
மருமகனாய் ஆனதென்ன
அடுத்த வீட்டுப் பையன் தன்னை 'அம்மா, அம்மா' என்று அருமையாக
அழைப்பவன். அவளுக்கு ஒரே ஒரு மகள். காட்டுக்கு ஈச்சஞ் சுள்ளி பொறுக்கப் போனவள்
வெகுநேரம் கழித்துத் திரும்பினாள். கண்ணெல்லாம் சிவந்திருந்தது. எதையோ
மறைப்பவள் போல சட்டென்று வீட்டினுள் போய்விட்டாள். தாய் மகளது தோற்ற மாறுதலைக்
கண்டு கொண்டு அவளிடம் காரணம் கேட்கிறாள். அவள் வெட்கத்
தோடு பதில்
சொல்லுகிறாள். ஒரு புறம் அதிர்ச்சி ஏற்பட்ட போதிலும் அவள் தன் அண்டை வீட்டு
அருமைப் பையன் மருமகனான விந்தையை எண்ணி உள்ளுக்குள்
மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.
| தாய்:
|
ஏழு மலை
கழித்து
ஈஞ்சறுக்க போற
மக்கா-உன்
கண்ணு செவந்த
தென்ன
களவு மெத்த
ஆனதென்ன?
|
| மகள்: |
கண்ணு
செவக்கவில்லை
களவு மெத்த
ஆகவில்லை-உன்
ஆசை மகனாலே-நான்
அருமை
கொறைஞ் சேனம்மா
|
| தாய்: |
ஆசை மகனே நீயே
அருமையுள்ள
புத்திரனே
மாய மகனே
நீயே-இப்போ
மரு மகனாய்
ஆனதென்ன? |
|
சேகரித்தவர்:
S.M.
கார்க்கி |
இடம்:
நெல்லை மாவட்டம். |
|