|
இந்திர சாலக் காரி
என்ன மறந்திட்டியே!
பூவோசரம் பூவே
பொழுதிருக்கப் பூத்த பூவே
நா மோந்த பூவாலே
நான் ஒரு சொல் கேட்டேன்
கம்மங் கதிரறுக்க
கருத்தூருணி தண்ணிருக்க
புங்க நிழலிருக்க
புருஷன் மட்டும் என்ன பயன்?
தூத்துக்குடி ஓரத்தில
தொன்னூர் கட வீதியில
போட்டுட்டுத் தேடுறானே
பொன் பதித்த மோதிரத்தை
பேப்ப மரத்துக்கிளி
வித விதமாப் பேசுங்கிளி
நான் வளர்த்த பச்சக்கிளி
நாளை வரும் கச்சேரிக்கு
வேப்ப மரத்தோரம்
வெட்டரிவாள் சாத்திவச்சேன்
பேர்பபமரம் பட்டதிண்ணு
விட்டதடி உன்னாசை
பாக்கப் பகட்டுதடி
பல்வரிசை கொஞ்சுதடி
கேக்க பயமாயிருக்க
கிளிமூக்கு மாம்பழமே!
வெள்ள வெள்ள சீலைக்காரி
வெள்ளரிக்கா கூடைக்காரி
கோம்ப மலை வெள்ளரிக்கா
கொண்டு வாடி தின்னுபாப்போம்
தங்கத்துக்கு தங்கம் இருக்க
தனித் தங்கம் இங்க இருக்க
பித்தளத் தங்கத்துக்கு
பேராசை கொண்டாயடி!
ஆல விளாறு போல
அந்தப் பிள்ள தலை மயிராம்
தூக்கி முடிஞ்சிட்டாலும்
தூக்கணாங் கூடு போல
கொண்ட வளர்த்த பிள்ளா
கோத கண்ணி மாதரசி
கொண்டாடி தலை மயித்தை
கொடுங்கையிலே போட்டுறங்க
நில்லடி கட்டப் பிள்ளா
நிறுத்தடி கால் நடைய
சொல்லடி வாய்திறந்து
சொந்தக் கணவனிடம்
ஆத்துக்குள்ள ரெண்டு முட்டை
அழகான கோழி முட்டை
கோழி முட்டை வாடுனாலும்
குமரி முகம் வாடுதில்ல
வட்டார வழக்கு:
அருவா-அரிவாள்
(பேச்சு);
பூவோசரம்பு-பூவரசம்பூ (பேச்சு);
தண்டட்டி-காலணி
; கைமசக்கம்-மிகுந்த
மயக்கம்;
பிள்ளா-பிள்ளை,பெண்;
கோதகண்ணி-கோதை, மாலை;
கண்ணி-பூச்சரம்.
|
சேகரித்தவர்
:
M.P.M.
ராஜவேலு
|
இடம்
:
தூத்துக்குடி வட்டாரம். |
|