| ஆண்:
|
பட் பட்டென்று
நிலாவடிக்க
பாலத்திலே
நான் நிக்க
மின்னுட்டான்
பூச்சி போல
மின்ன
வந்தால் ஆகாதோடி
|
| பெண்: |
ஆசையிருக்
குதையா
அழகு திரு
மேனிமேலே
சீவம்
கிடக்குதையா-எங்கப்பனுக்கு
ஸ்ரீ ராமர்
பச்சை மேலே
மானாமதுரையிலே
மரிக்கொழுந்து
நாத்துப்பாவி
அறுக்கப் பருவம்
தப்பி
இருப்பு இருந்து வாடுறனே!
|
| ஆண்:
|
காரவீட்டு மேடை
மேலே
காகிதம்
எழுதையிலே
மாஞ்சோலை
மசக்கத்திலே
மறந்திட்டேன்
ரெண்டெழுத்தை
|
| பெண்: |
ஒட்டுத்
திண்ணையிலே
ஒரு நாள்
பழக்கத்திலே
கட்டிச்
சதுர மெல்லாம்
கயறாக
உருகுதையா!
|
| ஆண்:
|
பாதையிலே பரட்டைச் செடி
பதக்குழக்கு
பூப்பூக்கும்
நீ வாடி
சிவத்தக் குட்டி
உனக்கு ரெண்டு
பூத்தாரேன்
பச்ச மாங்கா
ஒண்ணு தாரேன்
பழுத்த மாங்கா
ரெண்டு தாரேன்
கூந்தப்
பனங்கா தாரேன்
கொண்டு வாடி
சோத்துக் கட்டை
மஞ்சக்
கிழங்கு தாரேன்
மலங்காட்டு
நொங்கு தாரேன்
கொழும்பு
ரூவா ஒண்ணு தாரேன்
கொண்டு வாடி
சோத்துக் கட்டை
|
| பெண்:
|
கரும்புத் தோட்டத்திலே மச்சான்-நீ
கரும்பு வெட்டையிலே
இருப்புக்
கொள்ளுதில்லே-நான்
இரும்பா
உருகிட்டேனே
|
| ஆண்:
|
இரும்பா உருக
வேண்டாம்
இடுப்பிலே
கையும் வேண்டாம்
துரும்பா உருக
வேண்டாம்-நீ
தூரக்காரனுக்கு வாக்கப்பட
வேண்டாம்
|