பழைய காதலி
அவன் அழகான நங்கை ஒருத்தியைக் காதலித்தான். அவள் குடும்பத்தார்
எளியவர்கள். இடையில் அவனைவிட மூத்த பெண்ணொருத்தியை அவனுக்கு மணம் பேசினார்கள்.
அவளிடம் சொத்திருந்தது. அவன் இருந்து சாப்பிடலாம். இப்பாதுகாப்பை எண்ணி அவன் மணத்திற்குச்
சம்மதித்தான். மணமாயிற்று. அவன் மனைவி வீட்டிற்குப் போய் விட்டான். அவளுடைய நிழலில்
வாழ்ந்தான். அவளைக் கண்டு பயந்து அவள் சொற்படி நடந்து வந்தான். அவர்களுக்கு குழந்தை
ஒன்று பிறந்தது. ஒருநாள் கணவனும் மனைவியும், கணவனது ஊருக்கு வந்தார்கள். பழைய காதலி
அவனைச் சந்திக்கிறாள். மனைவி சற்று தூரத்தில் தெரு மறைவில் வந்து கொண்டிருக்கிறாள்.
பழைய காதலிக்கும் இவனுக்கும் பின்வரும் உரையாடல் நிகழ்கிறது.
காதலி
: |
ஆத்தோரம் நாணலடா
அதுக்கடுத்துச்
செய்வரப்பு
செய்வரப்புப்பாக்க
வந்த நீ
தேனமிர்தம்
உண்கலையோ?
|
அவன்
: |
நல்ல நல்ல துயிலுடுத்தி
நல் துயிலு
மேலணைஞ்சு
குஞ்சரமே புள்ளை
தூக்கி
குயிலாளும் வாராளடி
|
காதலி
: |
என்னிலேயும்
நல்லவளோ
இடையும்
சிறுத்தவளோ
கைக்கு
அணைவாயிருந்தா
போயிவாங்க
மன்னவரே
|
அவன்
: |
பருவம் பருவம் தாண்டி
பலாக்கா
நெல்லுடையாள்
புருவத்து
அழகுடையாள்
போயி வரக் கட்டாதடி |
வட்டார வழக்கு: துயில்-துகில்
;
செய்-வயல்
; பலாக்கா-பாலாக்காய். (தோட்டம்
வயல் உடையவள்).
சேகரித்தவர்
:
S.M. கார்க்கி |
இடம்
:
நெல்லை மாவட்டம். |
|