கொண்டு வந்து தந்தாராம்
அரியத் தெரியாமல்
அரமனைக்கு ஆள் விட்டாள்
சீவத் தெரியாமல்
திருமணைக்கு ஆள்விட்டாள்
அரமனை மாராசன்
திருமணையும் கொண்டு வந்து
அரிஞ்சு கொடுத்தாராம்
அழுதுத் துடித்தாராம்
அரிப்பாளாம் பொரிப்பாளாம்
முத்தம்மா
அரிசி சோறு தானிடுவாள்
முத்தம்மா
நெய்யாலே கச்சாயம்
சுடுவாளாம் முத்தம்மா
நேர மொரு பட்டுடுத்தி
வருவாளாம் முத்தம்மா
அரளிச் சுருள் ஓலையைத்தான்
அழகான கட்டிலிலே
நடுவிருந்து வாசிப்பார்
நம்பம தம்பி முத்தையா
குனிஞ்சு தான் சோறிடுவாள்
கற்பு மவள் நம்ம தங்கை
வாரி மனங் கொள்வார்
வரிசையுள்ள நம்ம தம்பி
எடுங்கடி பெண்டுகளே
எல்லோரும் தான் குலவை
போடுங்கடி பெண்டுகளே
பொன்னா லொரு குலவை
வட்டார வழக்கு
:
வடிச்சாள்-வடித்தாள்
;
பொரிச்சாள்-பொரித்தாள்
;
சாஞ்சு-சாய்ந்து
;
மாராசன்-மகராஜன், தந்தையைக் குறிக்கும்
;
திருமணை-திருகுமணை
;
அரிஞ்சு-அரிந்து (அறுத்து)
;
குனிஞ்சு-குனிந்து
;
குலவை-குரவை
;
மங்கலமாக-ஒலி எழுப்புவது.
உதவியவர்
:புலவர்
இராம இராசன்
சேகரித்தவர்
:கு.சின்னப்ப
பாரதி |
இடம்
:
வேலூர்,
சேலம் மாவட்டம். |
|